உ.பி. உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்..!
டெல்லி: 5 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக ராம் நாயக்கும், சத்திஸ்கர் மாநில ஆளுநராக பல்ராம்ஜி தாஸ் டாண்டனும், மேற்கு வங்க மாநில ஆளுநராக கேசரி நாத் திரிபாதியும், குஜராத் மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ் கோலியும், நாகலாந்து மாநில ஆளுநராக பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஐந்து மாநிலங்களுக்கு மட்டும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த ஆட்சியில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட பி.எல்.ஜோஷி (உத்தரப் பிரதேசம்), எம்.கே.நாராயணன் (மேற்கு வங்கம்), சேகர் தத் (சத்தீஸ்கர்), அஸ்வினி குமார் (நாகாலாந்து), பி.வி.வாஞ்சூ (கோவா) ஆகியோர் அண்மையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
எச்.ஆர்.பரத்வாஜ் (கர்நாடகம்), தேவானந்த் கொன்வர் (திரிபுரா) ஆகியோர் கடந்த மாதம் ஓய்வு பெற்றனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா சில நாட்களுக்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்டார். குஜராத் மாநில ஆளுநராக இருந்த கமலா பெனிவால் அண்மையில் மிசோரம் ஆளுநராக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications