ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்.. ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிய திரௌபதி முர்மு.. யாருன்னு தெரியுமா?
ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், பாஜக சார்பில் திரௌபதி முர்மு என்ற பழங்குடியின பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.
டெல்லி; தமிழகத்தில் பாஜக காலூன்ற, நடிகர் ரஜினிகாந்தை ஜனாதிபதியாக்க வலை விரித்துக் கொண்டிருந்த பாஜக, அவர் எஸ்கேப் ஆனதால் திரௌபதி முர்முவை வேட்பாளராக அறிவிக்க உள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவி காலம், வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
குடியரசு தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியாவதை தொடர்ந்து, டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில், யாரை போட்டி செய்வது என பாஜகாவில் கடும் விவாதம் நடத்தப்பட்டது.

ரஜினிக்கு வலை வீச்சு
பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பெயர்கள் வேட்பாளர் பெயருக்கு அடிப்பட்டன. தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு பாஜக வலை வீசியது. ஆனால், அதில் இருந்து ரஜினி வழக்கம் போல எஸ்கேப் ஆகிவிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்முவை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.

திரௌபதி யார்?
ஜனாதிபதி வேட்பாளராக பாஜகவால் முடிவு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக தற்போது உள்ளார். 20 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

சிறந்த எம்எல்ஏ விருது
ஓடிஷா மாநிலத்தில் எம்எல்ஏவாக இருந்த திரௌபதி முர்மு சிறந்த எம்.எல்.ஏ.விற்கான விருதினைப் பெற்றுள்ளார். அதே போன்று நிலகந்தா விருது 2007ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. 1997 ல் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட அவர், ஒடிஷா மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பிரணாப்புக்கு அடுத்து..
தற்போதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிந்த உடன் அந்த இடத்தை அலங்கரிப்பதற்கு பாஜக சார்பில் திரௌபதிதான் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். அப்படி அவர் தேர்வு செய்யப்பட்டார் என்றால் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதி திரௌபதிதான் என்ற பெருமை அவரைச் சேரும்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications