இந்திய குடியரசு தலைவர் தேர்தல் நடப்பது எப்படி? பாஜக வேட்பாளர் வெல்ல வாய்ப்புள்ளதா?
டெல்லி: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அரசியல்வாதிகளிடமும் நாட்டு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் தேதி ஜூலை 17 என்று இன்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்ததும் இந்த எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.

அது ஒருபக்கம் இருந்தாலும், இந்திய குடியரசு தலைவர் தேர்வு எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கத்தானே செய்யும். அதுகுறித்த விளக்கம்தான் இது.
ஜனாதிபதியை நாடாளுமன்ற இரு அவை எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபா என்று, எம்.பி.க்கள் மொத்தம் 776 பேர் உள்ளனர். நாடெங்கும் 4120 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் ஓட்டுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அதன்படி ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு தலா 708 ஆகும்.
| No. | State/UT | MLAs | Population | Vote value | Total vote value |
|---|---|---|---|---|---|
| 1 | Andhra Pradesh | 175 | 43,502,708 | 248 | 43400 |
| 2 | Arunachal Pradesh | 60 | 467,511 | 8 | 480 |
| 3 | Assam | 126 | 14,625,152 | 116 | 14,616 |
| 4 | Bihar | 243 | 42,126,236 | 173 | 42,039 |
| 5 | Chhattisgarh | 90 | 11,637,494 | 129 | 11,610 |
| 6 | Delhi | 70 | 4,065,698 | 58 | 4,060 |
| 7 | Goa | 40 | 795,120 | 20 | 800 |
| 8 | Gujarat | 182 | 26,697,475 | 147 | 26,754 |
| 9 | Haryana | 90 | 10,036,808 | 112 | 10,080 |
| 10 | Himachal Pradesh | 68 | 3,460,434 | 51 | 3468 |
| 11 | Jammu and Kashmir | 87 | 6,300,000 | 72 | 6,264 |
| 12 | Jharkhand | 81 | 14,227,133 | 176 | 14,256 |
| 13 | Karnataka | 224 | 29,299,014 | 131 | 29,344 |
| 14 | Kerala | 140 | 21,347,375 | 152 | 21,280 |
| 15 | Madhya Pradesh | 230 | 30,016,625 | 131 | 30,130 |
| 16 | Maharashtra | 288 | 50,412,235 | 175 | 50,400 |
| 17 | Manipur | 60 | 1,072,753 | 18 | 1,080 |
| 18 | Meghalaya | 60 | 1,011,699 | 17 | 1,020 |
| 19 | Mizoram | 40 | 332,390 | 8 | 320 |
| 20 | Nagaland | 60 | 516,499 | 9 | 540 |
| 21 | Odisha | 147 | 21,944,615 | 149 | 21,903 |
| 22 | Puducherry | 30 | 471,707 | 16 | 480 |
| 23 | Punjab | 117 | 13,551,060 | 116 | 13,572 |
| 24 | Rajasthan | 200 | 25,765,806 | 129 | 25,800 |
| 25 | Sikkim | 32 | 209,843 | 7 | 224 |
| 26 | Tamil Nadu | 234 | 41,199,168 | 176 | 41,184 |
| 27 | Telangana | 119 | 43,502,708 | 148 | 17612 |
| 28 | Tripura | 60 | 1,556,342 | 26 | 1,560 |
| 29 | Uttar Pradesh | 403 | 83,849,905 | 208 | 83,824 |
| 30 | Uttarakhand | 70 | 4,491,239 | 64 | 4,480 |
| 31 | West Bengal | 294 | 44,312,011 | 151 | 44,394 |
| Total | 4,120 | 549,302,055 | 549,474 |
எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படும். ஒட்டு மொத்தமாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். இதில் பாதிக்கு மேல் பெறுபவர்தான் ஜனாதிபதியாக முடியும்.
| Parliament | Seats | Vote Value | Total vote value |
|---|---|---|---|
| Lok Sabha | 543 | 708 | 384,444 |
| Rajya Sabha | 233 | 708 | 164,964 |
| Total | 776 | 708 | 549,408 |
| Combined | Total voters | Total vote value |
|---|---|---|
| Members of Legislative Assemblies (elected) | 4120 | 549474 |
| Members of Parliament (elected) | 776 | 549408 |
| Total | 4896 | 1,098,882 |
அதிமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய, என்.டி.ஏ கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளும், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க தயாராகிவிட்டன. எனவே பாஜக வேட்பாளர் வெற்றி இன்னும் சுலபமாகிவிட்டது.
-
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?











Click it and Unblock the Notifications