உத்தரகாண்ட்டில் திடீர் திருப்பம்.. ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனம் செய்தார் பிரணாப்.. காங். கண்டனம்
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிரடித் திருப்பமாக இன்று மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று அந்த மாநிலகத்தில் ஜனாதிபதி ஆட்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிரகடனம் செய்தார். இது ஜனநாயகப் படுகொலை என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் (காங்கிரஸ்) நாளை தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இருந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியும், முதல்வர் ஹரீஷ் ராவத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இன்று காலை ஹரீஷ் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், பண பலம், ஆள் பலத்தை வைத்து மத்திய அரசு ஜனநாயகத்தை கொலை செய்ய முயற்சிக்கிறது. எனது தலைமையிலான அரசை கவிழ்க்க சதி செய்கிறது. எங்கள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க மிரட்டுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். அவர் குற்றம் சாட்டிய சில மணி நேரத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்வரான விஜய் பகுகுணா தலைமையில் 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராவத்துக்கு எதிராக திரும்பினர். இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக மாறினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. எனவே தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தது பாஜக தரப்பு.
இதையடுத்து நாளைக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் ராவத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இந்த நிலையில் தங்களை முதல்வர் ராவத் விலை பேசுவதாகவும், தலா ரூ. 5 கோடி தர முயல்வதாகவும் கூறி இதுதொடர்பாக சிடி ஒன்றை வெளியிட்டனர் 9 அதிருப்தி எம்.எல்.ஏக்கள். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆட்சியைப் பிடிக்க பாஜக சதி செய்வதாக அது குற்றம் சாட்டியது. ராவத்தும், அந்த வீடியோ பொய்யானது என்று மறுத்தார்.
இந்த நிலையில் பாஜகவினர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து மனு கொடுத்தனர். உத்தரகாண்ட் ஆளுநரை மாற்றுமாறும், உத்தரகாண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சூழ்நிலையில் திடீரென 9 அதிருப்தி எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரகாண்ட் சட்டசபை சபாநாயகர் அதிரடியாக உத்தரவிட்டதால் சிக்கல் மேலும் கூடியது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு கூட உத்தரகாண்ட் விவகாரம் குறித்து விவாதித்தது. இதில் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டது.அவரும் இன்று குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்து உத்தரவிட்டார்.
காங்கிரஸ் கண்டனம்
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஜனநாயகப் படுகொலை என்று அது வர்ணித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications