கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் விலக நெருக்கடி முற்றுகிறது!
மும்பை: உச்சநீதிமன்ற கருத்தைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் பதவி விலக நெருக்கடி முற்றியுள்ளது.
ஐ.பி.எல். 6வது போட்டிகளின் போது பிக்ஸிங் முறைகேடுகளில் வீரர்களும் அணி நிர்வாகிகளும் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி முத்கல் கமிட்டி தமது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

இந்த அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. அப்போது முத்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியமானவை. இவை தொடர்பாக நேர்மையாக விசாரணை நடத்த வேண்டுமெனில் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும். அவர் பதவி விலகவில்லை எனில் உச்சநீதிமன்றமே அதற்கான உத்தரவை பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மொகிந்தர் அமர்நாத், பிஷன்சிங் பேடி ஆகியோர், கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் கிரிக்கெட் வாரிய முன்னாள் நிர்வாகியும் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவருமான கிஷோர் ருங்தாவும் சீனிவாசன் பதவி விலக வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரான சிவ்லால் யாதவும், உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை சீனிவாசன் ஏற்க வேண்டும். உச்சநீதிமன்ற கருத்தை எவரும் எதிர்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications