தேர்தலின் போது ஏழைகளை ஏமாற்ற வாக்குறுதிகள் வழங்கும் காங்கிரஸ்… பிரதமர் மோடி குற்றச்சாட்டு
காசிப்பூர்:2009ம் ஆண்டு தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி வழங்கிய கடன் சலுகைகள் மிட்டாயை காட்டி குழந்தையை ஏமாற்றுவது போன்ற ஒரு செயல் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
2019ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியை பார்வையிட்டார். அதன்பின்னர் காசிபூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :
காங்கிரஸ் கட்சி வழங்கிய கடன் சலுகைகள் மிட்டாயை காட்டி குழந்தையை ஏமாற்றுவது போன்ற ஒரு செயல். 2009ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு மிட்டாய் கடையில் வழங்குவது போல ஒரு கடன் சலுகையை வழங்கினார்கள், அதில் யாருக்காவது பயன் இருந்ததா? தேர்தலுக்கு பின் உங்களை மறந்துவிட்டார்கள் அல்லவா?, ஒரு மிட்டாய் கம்பெனியை நம்புவீர்களா?
2009ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சலுகையில், அரசு சுமார் 60 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியது. அதில் பயனடைந்த சுமார் 35 லட்சம் பேர் விவசாயிகள் அல்ல. விவசாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கொள்முதல் முறைகளை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டு, கிடங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் தயாரிப்பு விலையைவிட ஒன்றரை மடங்கு அதிக விலை கிடைக்கும் படி வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே காங்கிரஸ் கட்சி அளிக்கும் வாக்குறுதிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். விவசாயிகளின் காவலனாக மத்திய அரசு இன்றும் உள்ளது.
ஆகையால் திருடர்கள் குறுக்கு வழியில் உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம். ஏழைகள், விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரவும், முன்னேற்றத்திற்காகவும் மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. எனவே, எதிர்கட்சிகளின் ஆசை வார்த்தைக்கு யாரும் ஏமாற வேண்டாம் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications