பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த மோடி... விசனப்படும் அமெரிக்கா!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது குறித்து அமெரிக்கா நாளிதழான நியூயார்க் டைம்ஸ் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுச் செயலருடன் இந்திய வெளியுறவுச் செயலர் இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 25-ல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எல்லையிலோ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வந்தது.

அத்துடன் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர், காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களை சந்திக்கவும் அழைப்பு விடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த மத்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது.
இது குறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளேடு எழுதியுள்ள விமர்சன கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
- பேச்சுவார்த்தையை ரத்து செய்திருப்பதன் மூலம் பாகிஸ்தான் பிரச்சனையில் மோடி தடுமாற்றமான ஒருநிலையை மேற்கொள்கிறார்.
- தென்னாசியாவில் அணு ஆயுத அண்டைநாடுகள் இரண்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.
- தமது பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமரையும் அழைத்ததன் மூலம் நிறைய எதிர்பார்ப்புகளை மோடி உருவாக்கி இருந்தார்.
- இருநாட்டு தலைவர்களும் கை குலுக்கிக் கொண்ட புகைப்படம் புதிய அடையாளமாக தென்பட்டது.
- ஆனால் தற்போது வெளியுறவுச் செயலாளர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருப்பது தடுமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
- காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை பாகிஸ்தான் தூதர் சந்தித்து பேசியது இந்தியாவின் கோபத்துக்கு ஒரு காரணம்.
- -அதேபோல் மோடி பதவியேற்ற பின்னர் அதிகரித்து இருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தங்களும் ஒரு காரணம்.
- காஷ்மீரில் 30 முறை பாகிஸ்தான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருப்பதாக இந்தியா சொல்கிறது.
- அதே நேரத்தில் 57 முறை இந்தியா யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது என்கிறது பாகிஸ்தான்.
- கார்கில் போர்முனையில் அண்மையில் பேசிய மோடி, மரபுவழி யுத்தத்தை நடத்தும் சக்தியை இழந்துவிட்டதால் பயங்கரவாதம் என்ற நிழல் யுத்தத்தை நடத்துகிறது பாகிஸ்தான் என்றார்.
- கடந்த சில ஆண்டுகாலமாக காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர்களுடன் பாகிஸ்தான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
- நியூயார்க்கில் அடுத்த மாதம் ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications