காஷ்மீரில் திருமண விழாவை கொண்டாடுங்கள்.. சுற்றுலாவை ஊக்குவிக்க பிரதமர் மோடியின் புதிய திட்டம்
ஸ்ரீநகர்: சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜம்முவின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் 'வெட் இன் இந்தியா' திட்டத்தை செயல்படுத்தப்போவதாக கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் போன்ற இந்தியாவின் அழகிய இடங்களில் தங்கள் திருமண விழாவை நடத்த மக்களை ஊக்குவிப்பதுதான் எனது திட்டம் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இன்று காலை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்ற மோடி, அங்கு போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்ரீநகரின் பக்ஷி ஸ்டேடியத்திற்கு சென்றார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப் பிரிவு 370ஐ நீக்கம் செய்த பின்னர், இங்கு பிரதமர் மோடி வருவது இதுவே முதல்முறையாகும். எனவே இவரது வருகைக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆயிரக்கணக்கான காவல்துறையினரும், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். ட்ரோன்கள், சிசிடிவி கேமராக்கள் மூலமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
பக்ஷி ஸ்டேடியம் முழுவதையும் துணை ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. ஸ்டேடியத்தை சுற்றி 2 கி.மீ சுற்றளவு பகுதியை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது. இருப்பினும் சாதாரண மக்களின் அன்றாட பணிகள் தடைப்படாமல் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல ஜஹாங்கீர் சௌக்கிலிருந்து ராம்பாக் மற்றும் ராஜ்பாக்கிலிருந்து எல்.டி மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் இரவு 7 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பக்ஷி ஸ்டேடியத்தில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் 140 கோடி மக்களும் அமைதியாக வாழ்வதாக கூறியுள்ளார்.
மேலும், "உங்கள் இதயங்களை வெல்லவே காஷ்மீருக்கு வந்திருக்கிறேன். இந்த அமைதியான இந்தியாவுக்கு சூட்டப்பட்ட மகுடமாக காஷ்மீர் இருக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பது புதிய காஷ்மீருக்கான அடித்தளம். இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். உங்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றுவேன். இது மோடியின் வாக்குறுதி. சரியான நேரத்தில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உங்கள் மனதை வென்றெடுப்பேன்.
சுற்றுலாவுக்காக ஜம்மு காஷ்மீருக்கு யார் போவார்கள்? என்று கேட்ட காலம் போய், தற்போது சுற்றுலா துறையில் காஷ்மீர் கொடிகட்டி பறந்து வருகிறது. எனது அடுத்த திட்டம் 'வெட் இன் இந்தியா' (wed in india) என்பதுதான். ஜம்மு காஷ்மீர் போன்ற இந்தியாவின் அழகிய இடங்களில் தங்கள் திருமண விழாவை நடத்த மக்களை ஊக்குவிப்பதுதான் எனது திட்டம்" என்று கூறியுள்ளார்.
இந்திய பிரபலங்கள் வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்துக்கொள்வது அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலேயே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும் சமீபத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். எனவேதான் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமணம் இந்தியாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications