அகமதாபாத்தில் மாருதி சுசூகியின் மின்சார கார் ஆலை.. இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று மாலை அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி நடோராவில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார். பிரதமர் மோடிக்கு பாஜகவினர், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார். இன்று அகமதாபாத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவன மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி சென்றார்.

அங்கு நரோடாவில் இருந்து நிகோல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக அகமதாபாத் நகருக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். காரில் நின்றபடியே வெளியே திரண்டிருந்த மக்களை நோக்கி அவர் கையசைத்தபடி விழா மேடைக்குச் சென்றார். தொடர்ந்து, ரூ. 5,400 கோடியிலான பல்துறை வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி குஜராத்தில் தொடக்கி வைத்தார்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 133.42 கோடி மதிப்பில் 1,449 வீடுகள் மற்றும் 130 கடைகளை திறந்து வைத்தார். இந்த இரண்டு நாட்கள் சுற்றுப் பயணத்தில் ரூ. 5,477 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
அகமதாபாத்தில் மாருதி சுசூகி நிறுவன மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள இ-விட்டாரா மின்சார கார்கள் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications