மாபெரும் பேரணி, அதிர்ந்தது மே.வங்கம்.. மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி
கொல்கத்தா: பிரபல வங்க மொழி நடிகரும் திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் எம்பியும் மிதுன் சக்கரவர்த்தி இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
மேற்கு வங்க மாநிலத்திற்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் இரண்டுக்கும் குறைவான வாரங்களே உள்ளதால் தேர்தல் ஜுரம் உச்சத்தில் உள்ளது.

இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்தியே தீர வேண்டும் என பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. அக்கட்சியின் பல முக்கிய தலைவர்களும் மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். கடந்த சில மாதங்களில் நேதாஜி பிறந்த நாள் விழா உட்பட மூன்று முறை மோடி வங்கத்திற்குச் சென்றுள்ளார். இருப்பினும், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், மோடி மேற்கு வங்கத்திற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
பிரபல வங்க மொழி நடிகரும் திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் எம்பியும் மிதுன் சக்கரவர்த்தி இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருடன் வேறு சில நாட்டுப்புற கலைஞர்களும் பாடகர்களும் பாஜகவில் இணைந்தனர்.
70 வயதாகும் மிதுன் சக்கரவர்த்தி கடந்த 2014ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் விளம்பர தூதராக இருந்தார். இதற்காக அவர் பெற்ற ரூபாய் 1.2 கோடி குறித்து அமலாக்க துறை விசாரணை நடத்தியது.
இதையடுத்து அந்த தொகையை அமலாக்க துறையினருக்குத் திருப்பி அளித்த மிதுன் சக்கரவர்த்தி தனது எம்பி பதவியையும் ராஜனினமா செய்தார். அதன் பின்னர் இத்தனை நாட்கள் அரசியலிலிருந்து விலகியே இருந்த மிதுன் சக்கரவர்த்தி, தற்போது பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications