சோகம்.. இறுகிய முகம்! 280 பேர் பலியான ஒடிசா ரயில் விபத்து ஸ்பாட்டில் பிரதமர் மோடி.. என்ன செய்தார்?
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த கோரமான ரயில் விபத்தில் மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த பஹானாகா பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் விபத்து நடந்தது பற்றி அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்த வேளையில் பிரதமர் மோடி மிகவும் இறுக்கமாகவும், சோகமாகவும் இருந்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது மோதியதால் இந்த விபத்து நடந்தது. இந்நிலையில் தான் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்தது.

இந்தவேளையில் அந்த தண்டவாளத்தில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இப்படி 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உள்பட 280 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே தான் சம்பவ இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். அதன்பிறகு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து ரயில் விபத்து குறித்து டெல்லியில் ஆய்வு செய்த பிரதமர் மோடி 4 மணிக்கு ஒடிசா சென்றார்.
டெல்லியில் இருந்து விமானத்தில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் விபத்து நடந்த பஹானாகா பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும் அங்கிருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அதிகாரிகளிடம் விபத்து குறித்து முக்கிய விபரங்களை அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது பிரதமர் மோடி மிகவும் சோகமாக காணப்பட்டார். முகம் இறுக்கமாக இருந்தது. அங்கு தற்காலிக அமைக்கப்பட்ட கூடாரத்துக்கு சென்ற பிரதமர் மோடி கன்னத்தில் கைவைத்தபடி சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பிறகு பிரதமர் மோடி காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பாலேசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை சந்தித்து அவர் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறி தைரியம் வழங்கினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications