வழக்குகளை ரத்து செய்யுங்க.... புருவ புயல் பிரியா வாரியர் உச்சநீதிமன்றத்தில் மனு

புருவ டான்ஸுக்காக தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை பிரியா வாரியர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புருவ புயல் பிரியா வாரியரின் புருவ டான்ஸ் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 12-ஆம் தேதி "ஒரு அடர் லவ்" படத்தின் டீசர் காட்சிகள் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை புகழின் உச்சிக்கே கொண்டுசென்றுவிட்டது. 2 நிமிடங்கள் மட்டுமே வரும் புருவ அசைவுகளால் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக ஹைதராபாத்தில் இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

Priya Warrior files plea in SC to cancel all case against her

ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்ய மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர். இதுபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இதில் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தும்படியாக இல்லை என்பதால் அந்த பாடல் காட்சிகளை நீக்க முடியாது என்று படத்தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியா வாரியர் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+