"மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
Recommended Video
இந்தூர்: பாஜகவுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களை வாகனத்தை நிறுத்தி பிரியங்கா காந்தி கைகுலுக்கியதால் மோடி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய பிரதேசத்துக்கு முதல் முறையாக பிரியங்கா காந்தி வந்தார். இந்தூர் அருகே ராஜ் மோஹல்லாவிலிருந்து சாலை பிரசாரத்தை பிரியங்கா காந்தி தொடங்கினார். இதையடுத்து வழிநெடுகிலும் உள்ள மக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார்.

பின்னர் மற்றொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரியங்கா காந்தி விமான நிலையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் மற்றொரு கார்களில் ம.பி. முதல்வர் கமல்நாத்தும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும் உடனிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு இடத்தில் சிலர் ஒன்று கூடி "மோடி மோடி" என பிரியங்காவை வெறுப்பேற்ற கோஷம் எழுப்பினர். இதையடுத்து தனது வாகனத்தை உடனடியாக நிறுத்தினார் பிரியங்கா காந்தி.
உடனே காரை விட்டு இறங்கி கோஷம் எழுப்பியவர்களை நோக்கி சென்றார். உடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். அவர் உடனே பாஜக ஆதரவாளர்களுடன் கைகளை குலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் நீங்கள் உங்கள் வழியில் பயணியுங்கள். நான் என் வழியில் பயணிக்கிறேன் என கூறிவிட்டு சென்றார். இதனால் பாஜக ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
इंदौर में कुछ लोगों ने प्रायोजित तरीक़े से मोदी-मोदी के नारे लगाए तो प्रियंका गांधी ने कार से उतर कर नारे लगाने वालों से हाथ मिलाया और कहा “आप अपनी जगह, मैं मेरी जगह ‘आल दी बेस्ट”।
— MP Congress (@INCMP) May 13, 2019
इसे कहते हैं देश की मिट्टी, देश की जनता और देश के कण-कण से प्यार।
काश...मोदी भी देश को समझ पाते। pic.twitter.com/dEYL7CdaKI
சற்றும் எதிர்பார்க்காத வினையை பிரியங்கா ஆற்றியதை அடுத்து பாஜக ஆதரவாளர் ஒருவர் அவரை புகைப்படம் எடுத்தார். அவர் சென்றவுடன் பிரியங்காவின் செயலை நினைத்து பாஜக ஆதரவாளர்கள் பூரிப்படைந்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அது போல் நேற்று போபாலில் பிரச்சாரம் செய்த போது நேரு மைதானத்தில் ஏராளமான பெண்கள் இருந்தனர். அவர்களுடன் தடுப்பு கட்டைக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார். திடீரென உற்சாக மிகுதியால் அவர்களை பார்க்க தடுப்பு கட்டையை எகிறி குதித்து சென்ற சம்பவம் வைரலாகி வருகிறது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications