'அராஜக தலைவர்கள் நக்சலைட்டுகளாகட்டும்'.. டெல்லி பிரசார கூட்டத்தில் கேஜ்ரிவாலை வறுத்தெடுத்த மோடி
டெல்லி: சாலைகளில் அமர்ந்து தர்ணா நடத்துவோருக்கு அந்த வேலையையே தந்துவிட்டு, எங்களுக்கு ஆட்சி நடத்தும் பணியை தாங்கள் என்று டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
டெல்லி சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேதி அறிவிப்புக்கு முன்பே பா.ஜனதாவும், ஆம் ஆத்மியும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.

பிரதமர் நரேந்திரமோடி பா.ஜனதாவின் பிரசாரத்தை இன்று தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 60 ஆயிரம் பேர் அமர இருக்கை வசதி செய்யப்பட்டு இருந்தது. தொண்டர்கள் வசதிக்காக ராம்லீலா மைதானம் நோக்கி 2000 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது: டெல்லியை ஜெனரேட்டர் இல்லாத நகரமாக மாற்றுவோம். அதன் மூலம் நகரில் பரவும் காற்று மாசு கட்டுப்படும். டெல்லியில் மின்சார பற்றாக்குறை பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளதை நான் அறிவேன். பாஜக ஆட்சிக்கு வந்ததும், 24 மணி நேர மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்போன் நெட்வொர்க்கை ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுப்பதை போல, மின்சார சப்ளை நிறுவனங்களை தேர்வு செய்யும் வசதி டெல்லிவாசிகளுக்கு வழங்கப்படும். நாட்டின் தலைநகர், டெல்லியில், குடிசைவாசிகள் நடைபாதைகளில் தூங்குவதை நான் விரும்பவில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதற்குள், டெல்லியில் குடிசைவாசிகள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
பொய்யை பரப்புவதற்கு என்றே ஒரு தொழிற்சாலையை டெல்லியில் ஒருவர் நடத்துகிறார். ஆனால் அந்த பொய் பரப்பும் நபரை மக்கள் ஒதுக்கிவிட்டனர். சாலைகளில் அமர்ந்து தர்ணா நடத்துவோருக்கு அதையே செய்ய மக்கள் அனுமதிக்க வேண்டும். நல்லாட்சி நடத்தும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
நான் அராஜகவாதிதான் என்று சொல்லும் தலைவர்களை நீங்கள் பார்த்துள்ளீர்களா? நக்சலைட்டுகள்தான் அப்படிச் சொல்வார்கள். எனவே இப்படி சொல்லித்திரியும் தலைவர்களும், நக்சலைட்டுகளோடு செல்ல வேண்டியதுதான். வரும் தேர்தலிலாவது, பாஜகவுக்கு முழு பெரும்பான்மை தர வேண்டும். ஏற்கனவே ஓராண்டு வீணாகிவிட்டது. இதை வீணாக்கியவர்களுக்கு நீங்கள் தண்டனை கொடுக்க வேண்டும். இவ்வாறு நரேந்திரமோடி பேசினார். முன்னதாக பாஜக தலைவர் அமித்ஷாவும் உரையாற்றினார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications