ரயில் பெட்டிகளின் கூரைகளில் ஏறி போராட்டம் நடத்தினால் சிறை!
டெல்லி: மறியல் போராட்டங்களின் போது ரயில் கூரைகளின் மீது ஏறக்கூடாது. அப்படி மீறி ஏறினால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சமீபகாலமாக பல்வேறு போராட்டங்களின் போது போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் மின்மயமாக்கப்பட்ட ரயில் தடங்களில் ரயில் இன்ஜின்கள் மற்றும் கூரைகளின் மீது ஏற முயற்சித்து வருகிறார்கள்.
மின்மயமாக்கப்பட்ட ரயில் தடங்கள் 25 ஆயிரம் வோல்ட் மின்சக்தி கொண்டவையாக இருப்பதால், அத்தகு மின்தடங்களின் அருகில் 2 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களுக்கு கடும் மின் அதிர்ச்சி ஏற்படலாம் என்பதை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
ரயில் இன்ஜின்களில் மேற்பகுதியும் 25 ஆயிரம் வோல்ட் மின்சக்தியில் இயங்குவதால் ரயில் என்ஜின்களின் கூரை மேல் ஏற முயற்சிப்பவர்கள் மீது மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. அது போலவே ஒரு குறிப்பிட்ட மின் கம்பி அணைக்கப்பட்டிருந்தாலும், அருகில் உள்ள மின்கம்பியில் உள்ள மின்சாரம் அவர்களை தாக்க வாய்ப்புள்ளது.
எனவே, தங்களது தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகு போராட்டங்களின் போது ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் கூரைகளின் மீது ஏறுவதையும், மின்கம்பிகளுக்கு அருகில் வருவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இத்தகு செயல்கள் இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் சிறை தண்டனை மற்றும் பெனால்டி விதிக்கத்தக்க தண்டனைக்குரிய செயலாகும் என்பதும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications