மைசூருவில் ஹால் மீட்டிங்கில் கூட பேசவிடாமல் கோஷம் போடுகிறார்களே... அமித்ஷா 'ஷாக்'

மைசூருவில் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் திடீரென முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மோடி அரசு ஏழைகளுக்கு எதுவும் செய்யாது என அமித்ஷா பேசியதாக மொழிபெயர்த்ததால் சர்ச்சை- வீடியோ

    மைசூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷாதான் இப்போது ஹைலைட்.. அவர் தப்பாக உளறுவதும் அவரது பேச்சை தவறுதலாக மொழிபெயர்ப்பதும் காங்கிரஸாரை உற்சாகப்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

    சொந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் எதியூரப்பாதான் ஊழல் ஆட்சியில் முதலிடம் என படுபயங்கரமாக உளறினார் அமித்ஷா. அடுத்ததாக தலித்துகள், ஏழைகளுக்கு எதிரானவர் மோடி என அமித்ஷாவின் பேச்சை பாஜக எம்பி மொழி பெயர்த்தார்.

    Protesters Corner Amit Shah in Mysuru

    இப்போது நான் உளறினாலும் மக்கள் தவறு செய்யமாட்டாங்க..தேர்தலில் சரியாக வாக்களிப்பார்கள் என சப்பை கட்டு கட்டுகிறார் அமித்ஷா. இந்த நிலையில் மைசூருவில் தலித் தலைவர்களுடன் ஹால் மீட்டிங் ஒன்றில் அமித்ஷா பங்கேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேச தொடங்கினார். அப்போது திடீரென பார்வையாளர்கள் பகுதியில் இருந்தவர்கள் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர்.

    அவர்கள் என்ன முழக்கங்கள் எழுப்புகிறார்கள் என தெரியாமல் அதிர்ச்சியோடு அமித்ஷா பார்த்துக் கொண்டிருந்தார். மத்திய பாஜக அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, அண்மையில் அரசியல் சாசனத்தை மாற்றி அமைப்போம் என கூறியிருந்தார். அதேபோல தலித்துகளை குரைக்கும் நாய்கள் எனவும் கூறியிருந்தார். இதனைக் கண்டித்துதான் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+