ஜம்மு-காஷ்மீரில் ஐ.எஸ். கொடியுடன் ஊர்வலமாக சென்று பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தால் பதற்றம் !
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஐ.எஸ். அமைப்பின் கொடியுடன் ஊர்வலமாக சென்று பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தில் மோதல் வெடித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஜாமியா மசூதி அருகே கிராம பாதுகாப்பு குழுவிற்கு எதிராக பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் கொடியையும், ஐஎஸ் அமைப்பின் கொடியையையும் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் பெண்கள், சிறுவர்களை முன்னிறுத்தி போராடிய போராட்டகாரர்கள் ஊர்வலமாக சென்ற போது பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது திடீரென் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி அமைந்த பிறகு போராட்டங்கள் அடிக்கடி வெடித்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்றும் அங்கு போராட்டம் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications