அபாரம் இந்தியா.. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு: புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி உள்பட 3 பேரை சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி 2500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றனர்.

அப்போது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர், தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை எடுத்துக் கொண்டு சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனத்தின் மீது காரை மோதினார்.
இதில் வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு கடந்த சில நாட்களுக்கு இந்திய விமான படை பதிலடி கொடுத்தது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாத முகாம்களை வெடிகுண்டுகளை வீசி அழித்தது.
பின்னர் பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்ற இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. இதில் அந்நாட்டு எல்லையில் விழுந்த இந்திய விமானத்தின் விங் கமாண்டர் அபிநந்தனை பிணையாக பிடித்து வைத்து பாகிஸ்தான் ஆட்டம் காட்டியது.
இதையடுத்து ஒரே நாளில் உலக நாடுகள் மூலம் அழுத்தம் கொடுத்த இந்தியா, பாகிஸ்தானை பணிய வைத்தது. இது இந்தியர்களுக்கு மாபெரும் வெற்றியாகும்.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி முத்சார் அகமது கான் உள்பட 3 பயங்கரவாதிகளை ட்ரால் அருகே பிங்லிஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications