தேவையா?.... எவரெஸ்ட் ஏறியதாக டுபாக்கூர் போட்டோ.. அடேங்கப்பா போலீஸ் தம்பதி டிஸ்மிஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புனே: எவரெஸ்ட் மலைச்சிகரம் ஏறிய முதல் காவல்துறையினர் என்று மார் தட்டிக் கொண்டவர்கள் வெளியிட்டது போலியான படம் என்பது தெரியவந்ததையடுத்து அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

புனேவைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் தம்பதியான தினேஷ் ரத்தோட் மற்றும் தர்கேஷ்வரி ரத்தோட் இருவரும் தாங்கள் முதன் முதலில் மவுண்ட் எவரெஸ்ட் சிகரம் ஏறிய தம்பதி என்று ஒரு புகைப்படத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டிருந்தனர்.

Pune Police Couple Who Faked Mount Everest Feat photos Dismissed

ஆனால் இந்த தம்பதி வெளியிடும் புகைப்படங்கள் போலியானவை என்று நேபாள உள்ளூர் மலையேறுபவர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் தம்பதியர் குறிப்பிடும் காலபட்டத்தில் மலைறேய்யத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த தம்பதி வெளியிட்டு வருவது போலியான புகைப்படமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனைடுத்து கான்ஸ்டபிள் தம்பதியிடம் விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முன்பு விசாரணைக்கு ஆஜரானவர்கள் மலையேற்றம் குறித்து முரண்பட்ட தகவல்களைக் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Pune girl gangraped by four minor boys | Oneindia News

எவரெஸ்ட் மலை ஏறியது போன்ற மார்ப் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு தவறான தகவல்களை விளம்பரப்படுத்திய, மஹராஷ்டிர காவல்துறை மீதான கண்ணியத்தை குறைத்த குற்றத்திற்காக அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர்அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The police constable couple from Pune, Dinesh Rathod and Tarkeshwari Rathod, faked about the Everest ascent, morphed the photographs dismissed after the cheating proved
Please Wait while comments are loading...