முட்டிக்கு மேல் ஸ்கர்ட், வெள்ளை கலர் உள்ளாடை அணிய வேண்டும்.. பள்ளி உத்தரவால் கொதித்த பெற்றோர்
Recommended Video

புனே: மாணவிகள் முட்டிக்கு மேல் தான் ஸ்கர்ட் அணிய வேண்டும், வெள்ளை அல்லது தோல் நிறத்திலான உள்ளாடைகள் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து சர்ச்சையை கிளப்பியுள்ளது புனே நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி.
இது குறித்து பள்ளியின் டைரியில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒப்புதல் அளிப்பதாக கூறி பெற்றோர் கையொப்பம் இட வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த டைரியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கொதித்தெழுந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக, பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை அல்லது தோல் நிறத்திலான உள்ளாடைகள் அணிய வலியுறுத்தியது ஏன் என்று பள்ளி நிர்வாகத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, MIT Group
கல்வி குழுமங்களின் செயல் இயக்குநரான சுசித்ரா கூறுகையில், "இதற்கு முன்பாக நடந்த சில சம்பவங்கள் இந்த அனுபவ அடிப்படையில் தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம் என்றார். இதில், உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும், நல்ல நோக்கத்துடன் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications