திரும்ப திரும்ப.. நீதிமன்ற நேரத்தை வீணாக்குறீங்க.. மத்திய அரசுக்கு ரூ.25000 அபராதம் விதித்த ஐகோர்ட்!
சண்டிகர்: மத்திய அரசுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக மத்திய அரசுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டில் ஹர்பஜன் கவுர் என்பவரின் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அவருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க குர்தாஸ்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2004ஆம் ஆண்டில் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த அப்பீல் நிராகரிக்கப்பட்டு, குர்தாஸ்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதியின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கூடுதல் சந்தை மதிப்பின் தொகைக்கு வட்டி வழங்குவதில் கீழமை நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கவில்லை என மத்திய அரசு மீண்டும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, கூடுதல் சந்தை மதிப்பு, இழப்பீட்டின் ஒரு பகுதியாகும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி, பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜ்பீர் செஹ்ராவத், மத்திய அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நிலத்தின் உரிமையாளர் கூடுதல் சந்தை மதிப்பின் மீதான வட்டிக்கு உரிமையுடையவர் என்றும் தெரிவித்ததோடு, மீண்டும் மீண்டும் தேவையில்லாமல் வாதாடி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி மத்திய அரசுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
நீதிபதி ராஜ்பீர் செஹ்ராவத் , "நீண்ட காலத்திற்கு முன்பே உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட ஒரு சட்டப் பிரச்சினையில் மனுதாரர்கள் தேவையில்லாமல் அப்பீல் செய்யும் அளவிற்குச் சென்றுவிட்டதால், மனுதாரர்கள் தகுந்த பலனை பெறத் தகுதியானவர்கள். நீதிமன்றத்தின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர்களின் தவறை உணர்த்துவதற்காக ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications