ஆபரேஷன் சிந்தூர் நடக்கும்போதே பாகிஸ்தானுக்கு போன உளவு தகவல்.. பஞ்சாப் உளவாளியை தூக்கிய போலீஸ்
சண்டிகர்: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் மோதல் வெடித்தது. அந்த மோதல் இப்போது முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உளவாளிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே யூடியூப் பிரபலம் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் நடக்கும்போதே உளவுத் தகவல்களைச் சொன்னதாகச் சொல்லி மற்றொரு நபரைப் பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே, குறிப்பாக ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். யூடியூப் பிரபலம், செக்யூரிட்டி கார்டு, பல்கலைக்கழக மாணவர் உட்படப் பலரும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மீண்டும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த இந்த உளவாளியை போலீசார் கைது செய்துள்ளதாகப் பஞ்சாப் போலீசார் தெரிவித்தனர்.. இவருக்குப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்புடன் மட்டுமின்றி, காலிஸ்தான் பயங்கரவாதி கோபால் சிங் சாவ்லாவுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
பல ஆண்டுகளாக இவர் இந்திய ராணுவம் குறித்த தகவல்களைப் பாகிஸ்தான் ஏஜெண்டுகளுடன் பகிர்ந்து வந்துள்ளார். குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் சமயத்திலும் கூட இந்திய ராணுவத்தின் நடமாட்டம் குறித்த முக்கியமான தகவல்களை அவர் பாக். ஏஜெண்டுகளுக்கு பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
யார் அந்த நபர்
கைது செய்யப்பட்ட நபர் ககன்தீப் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் இந்திய ராணுவம் எங்கே இருக்கிறது.. முகாம்கள் எங்கே உள்ளன என்பது போன்ற ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தேசியப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாலேயே அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாகப் பஞ்சாப் காவல்துறை இயக்குநர் ஜெனரல் கௌரவ் யாதவ் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில், ககன்தீப் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட காலிஸ்தானி ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. மேலும், அவர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்டுகள் உடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து அதற்கு அவர் பணம் பெற்றதும் தெரிய வந்துள்ளது" என்றார்.
தீவிர விசாரணை
அந்த நபரின் செல்போனையும் மீட்டு வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தனது பாகிஸ்தான் ஏஜண்டுகளுடன் உடன் பகிர்ந்து கொண்ட உளவுத்துறை பற்றிய முக்கியமான தகவல்கள் குறித்து மேஜர் தகவல்கள் அதில் உள்ளன. மேலும், அவருக்கு 20க்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐ பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது..
ஆபரேஷன் சிந்தூர்
அவருக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்கள்.. அவருக்கு உதவியவர்கள் யார்.. அவரது நெட்வொர்க்கின் முழு நோக்கம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக டிஜிபி கூறினார். தற்போது பாகிஸ்தானில் இருக்கும் காலிஸ்தானி பயங்கரவாதி கோபால் சாவ்லா, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் இணைந்து இந்தியாவில் இதுபோல பல செயல்களில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் உளவுத் தகவல்களைச் சேகரிக்கத் தீவிரமாக முயன்றதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications