Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துப்பாக்கியில் இருந்து சீறிய 'குண்டு".. சுருண்டு விழுந்த அப்பாவி இளைஞர்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ்: போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியில் இருந்து திடீரென வெளியேறி குண்டு, அப்பாவி இளைஞரின் நெஞ்சில் பாய்ந்ததில் அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

பஞ்சாபில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸாருக்கு எதற்கு கைத்துப்பாக்கி?

போலீஸாருக்கு எதற்கு கைத்துப்பாக்கி?

சட்டம் - ஒழுங்கை பேணவும், சமூக விரோதிகளிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்றவும் போலீஸாருக்கு நமது அரசியலமைப்புச் சட்டம் பல சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. அதில் முக்கியமானது, துப்பாக்கியை வைத்திருக்கும் உரிமை. எந்த அரசாங்க ஊழியர்களுக்கும் வழங்கப்படாத இந்த உரிமை, போலீஸாருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பிரத்யேக உரிமையை மிகவும் பொறுப்புடன் போலீஸார் கையாள வேண்டும். தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காகவோ, பகையை தீர்த்துக்கொள்வதற்காகவோ அந்த துப்பாக்கியை தவறாக பயன்படுத்த கூடாது. காவல்துறையில் சேரும் போதே ஒவ்வொரு போலீஸாரும் இந்த உறுதிமொழியை எடுத்திருப்பார்கள். ஆனால், பஞ்சாபில் ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியை வைத்து செய்த செயல் மிகுந்த கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

சப் இன்ஸ்பெக்டர்

சப் இன்ஸ்பெக்டர்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஷகிந்தர் சிங். இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு வந்துள்ளார். நன்றாக அறிமுகமானவர் என்பதால் கடை ஊழியர்கள் ஷகிந்தர் சிங்குடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து கடையில் இருந்த கண்ணாடி மேஜை மீது வைத்தார்.

நொடியில் நடந்த விபரீதம்

நொடியில் நடந்த விபரீதம்

அப்போது அந்த துப்பாக்கி தொடர்பாக ஊழியர்கள் ஏதோ கேட்க, போலீஸ் அதிகாரி ஷகிந்தர் சிங்கும் அதை எடுத்து ஆர்வமாக விளக்கிக்கொண்டிருந்தார். பின்னர், அந்த துப்பாக்கியை கையில் எடுத்து அதை சுழற்றியவாறே அவர் அங்கிருந்த செல்போன்களை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அந்த துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்து அங்கிருந்த ஊழியர் முகமது ஆசிப் (24) என்பவரின் நெஞ்சில் பாய்ந்தது.

கவலைக்கிடம் - சஸ்பெண்ட்

கவலைக்கிடம் - சஸ்பெண்ட்

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை ஷகிந்தர் சிங்கும், அங்குள்ள ஊழியர்களும் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ரத்த இழப்பு அதிகம் ஏற்பட்டிருப்பதாலும், நெஞ்சில் குண்டு பாய்ந்ததாலும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், ஷகிந்தர் சிங்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் துப்பாக்கி டிரிகரில் தெரியாமல் கைப்பட்டு குண்டு பாய்ந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனிடையே, அவரை சஸ்பெண்ட் செய்து அமிர்தசரஸ் எஸ்.பி. வரீந்தர் சிங் இன்று உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+