பாலியல் துன்புறுத்தல்: சிறுமி உயிரிழந்தது ”கடவுளின் விருப்பமாம்”- பஞ்சாப் அமைச்சரின் “பகீர்” கருத்து
பஞ்சாப்: பஞ்சாப்பில் பாலியல் துன்புறுத்தலின்போது சிறுமி உயிரிழந்தது கடவுளின் விருப்பப்படியே நிகழ்ந்ததாக அம்மாநில கல்வி அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பின் மோகா மாவட்டத்தில், சில தினங்களுக்கு முன் பாலியல் துன்புறுத்தலைத் தடுத்த சிறுமியையும், அவரது தாயாரையும் கும்பல் ஒன்று ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டது.
இதில் சிறுமி உயிரிழந்தார். அவரது தாயார் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் சுர்ஜித் சிங் ரக்ரா, எது நடந்ததோ, அது கடவுளின் விருப்பப்படியே நடந்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், இயற்கையின் முன்னால் நிகழும் விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் அமைச்சர் சுர்ஜித் சிங் ரக்ரா தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஆளும் சிரோமணி அகாலிதள கட்சி எம்.எல்.ஏ ஜோகிந்தர் பால் ஜெய்னும் சிறுமி உயிரிழந்த சம்பவத்தை விபத்து என்றும் நீதிமன்றம் உத்தரவிடும் இழப்பீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதாக கூறப்படும் தனியார் பேருந்து, துணை முதலமைச்சர் சுக்பிர் சிங் பாதலின் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதால், சம்பவத்தை விபத்தாக சித்தரிக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications