நள்ளிரவில் பயங்கரம்.. ஒடிசாவில் துர்க்-பூரி ரயிலில் ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து! என்ன நடந்தது
புவனேஷ்வர்: ஒடிசாவில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தின் துயரமே ஆறாத நிலையில், இப்போது அங்கே மிக மோசமான மற்றொரு விபத்து அரங்கேறியுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியது. இப்படி மூன்று ரயில்கள் சிக்கியதே இந்த விபத்து மிக மோசமாக மாற காரணமாக அமைந்தது.

மொத்தம் 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கிய நிலையில், 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், இன்டர்லாங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின்னரே உண்மை தெரிய வரும்.
இதனிடையே ஒடிசாவில் இப்போது மற்றொரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. அங்கே பூரி-துர்க் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள காரியார் சாலை அருகே சென்ற போது அங்கே உள்ள ஏசி பெட்டிகள் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
பிரேக் ஷூவில் ஏற்பட்ட சில கோளாறுகள் காரணமாக ஏசி பெட்டிகள் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கிழக்கு மத்திய ரயில்வே பிரிவு கூறுகையில், "காரியார் சாலை நிலையத்தில் 10 மணிக்கு வந்த போது 18426 ரயிலின் B3 பெட்டியில் உராய்வு காரணமாக பிரேக் பேட்கள் தீப்பிடித்தன. கோச்சின் உள்ளே தீ பரவவில்லை. பிரேக் பேட்களில் மட்டுமே தீப்பிடித்திருந்தது.. வேறு எந்த சேதமும் இல்லை. பிரச்சனை சரி செய்யப்பட்டு, இரவு 11 மணிக்கு ரயில் புறப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தில் ஆறு தொழிலாளர்கள் சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மறுநாளே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications