'தோத்தாலும் ஜெயிச்சோமடா..' - உத்தரகாண்ட் முதல்வராக மீண்டும் புஷ்கர் சிங் தாமி தேர்வு
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சராக மீண்டும் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்தது.
இதையடுத்து, உத்தரகாண்ட் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

பாஜக
உத்தரகாண்டில் தொங்கு சட்டசபை அமையும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் உத்தரகாண்டில் பாஜக ஆட்சி அமைக்கிறது. உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 47 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் 19 இடத்திலும், மற்ற கட்சிகள் 4 இடத்திலும் வெற்றி பெற்றன.

எம்.எல்.ஏ கூட்டம்
இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். டேராடூனில் உள்ள விதான் சபாவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பன்சிதர் பகத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

புஷ்கர் சிங் தாமி
டேராடூனில் நடந்த எம்.எல்.ஏ கூட்டத்தில் உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காதிமா தொகுதியில் போட்டியிட்டு அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் உத்தரகாண்டுக்கு புது முதல்வர் தேர்வாகலாம் என கருதப்பட்டது. புஷ்கர் சிங் தாமி எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில், அடுத்த 6 மாதத்தில் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும்.

அரசியல் பயணம்
புஷ்கர் சிங் தாமி, பாஜகவின் மாணவ அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரீஷித்தில் 1990ம் ஆண்டு தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2008 வரை பாஜகவின் யுவ மோர்ச்சாவின் மாநில தலைவராக செயல்பட்டார். உத்தரகாண்டில், சென்ற பாஜக ஆட்சியில் மூன்று முதல்வர்கள் பதவியில் இருந்தார்கள். திரிவேந்திர சிங், திரைத் சிங் மாற்றப்பட்டு புஷ்கர் சிங் முதல்வர் பதவிக்கு வந்தார். இந்நிலையில், சட்டசபைத் தேர்தலில் தோற்றாலும் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications