நீண்ட கால ஆர்.எஸ்.எஸ். அனுபவம்- உத்தரகாண்ட் மாநில 11-வது முதல்வராக புஷ்கர்சிங் தாமி பதவியேற்றார்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக புஷ்கர்சிங் தாமி (வயது 45) இன்று மாலை பதவி ஏற்றார். உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா, புஷ்கர்ர்சிங் தாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தில் 4 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் திரிவேந்திரசிங் ராவத். ஆனால் அவர் மீது கடும் அதிருப்தி நிலவியது. இதனால் 4 மாதங்களுக்கு முன்னர் திரிவேந்திரசிங் ராவத் பதவி விலகினார்.
அவருக்கு பதில் தீரத்சிங் ராவத் புதிய முதல்வராக மார்ச் மாதம் பதவியேற்றார். தற்போது லோக்சபா எம்.பி.யாக உள்ள தீரத்சிங் வரும் செப்டம்பருக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்றது தேர்தல் ஆணையம்.

புஷ்கர்சிங் தாமி தேர்வு
இதனால் தீரத்சிங் ராவத் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து டேராடூனில் சனிக்கிழமையன்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக புஷ்கர்சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியாவை புஷ்கர்சிங் தாமி நேற்று மாலை சந்தித்தார்.

மாலையில் பதவியேற்பு
இந்த நிலையில் இன்று மாலை உத்தரகாண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக புஷ்கர்சிங் தாமி இன்று மாலை பதவியேற்கிறார். டேராடூனில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் புஷ்கர்சிங் தாமிக்கு, ஆளுநர் பேபி ராணி மவுரியா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 மாதங்களில் 3-வது முதல்வராக புஷ்கர்சிங் தாமி பதவியேற்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். டூ பாஜக
1975-ம் ஆண்டு ராணுவ வீரரின் மகனாக பிறந்தவர் புஷ்கர்சிங் தாமி. இவரது தந்தை கடந்த ஆண்டுதான் காலமானார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார் புஷ்கர்சிங் தாமி. 2002-2008ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பின் மாநில தலைவராகவும் பதவி வகித்தார் புஷ்கர்சிங் தாமி. 2001-2002-ல் உத்தரகாண்ட் முதல்வராக இருந்த பகத்சிங் கோஷியாரின் சிறப்பு அலுவல் அதிகாரியாகவும் பணியாற்றினார் புஷ்கர்சிங். கோஷியாரி தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கிறார்.

சிறந்த எம்.எல்.ஏ.
2012 சட்டசபை தேர்தலில் கதிமா தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை எம்.எல்.ஏ.வானார். பின்னர் 2017 சட்டசபை தேர்தலிலும் வென்றார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான விருதையும் பெற்றிருக்கிறா புஷ்கர்சிங். பாஜக ஆட்சிக் காலத்தில் திரிவேந்திர சிங் ராவத், தீரத்சிங் ராவத் முதல்வர்களாக இருந்த போது அமைச்சரவையில் கூட இடம்பெறாதவர் புஷ்கர்சிங் தாமி.

புஷ்கர்சிங் தாமி தேர்வு ஏன்?
உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவராக உள்ள மதன் கவுசிக், பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜகவுக்குள் ஜாதி ரீதியான சமநிலையை ஏற்படுத்துவதற்காக தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த புஷ்கர்சிங் தாமி புதிய முதல்வராக்கப்பட்டுள்ளார். தாம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த புஷ்கர்சிங் தாமி, சாதாரண ராணுவ வீரரின் மகனை இன்று மாநிலத்தின் முதல்வராக்கி உள்ளது பா.ஜ.க. நான் மக்களுக்கு சேவையாற்றுவதையே முதல் கடமையாக கொண்டிருக்கிறேன் என்றார்.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ஆர்எஸ்எஸ் தலைவர் பயணித்த ரயில் பெட்டியில் கல்வீச்சு.. உடைந்து சிதறிய கண்ணாடி.. 2 பேர் அதிரடி கைது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications