சந்திரபாபு நாயுடுவை ஜெயிலுக்கு அனுப்பிய ஜெகன்..பாஜக 'டீப் சைலண்ட்'- தெலுங்கு 'தேசத்தில்' திக் திக்!
விஜயவாடா: தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி பாஜக மேலிடம் கனத்த மவுனம் காத்து வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் ஆந்திராவில் அடுத்து என்ன நடக்கும்? என்கிற திக் திக் பரபரப்பு மையம் கொண்டிருக்கிறது.
ஆந்திராவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கோலோச்சிய மாநிலங்களில் ஒன்று. என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சி உருவெடுத்த பின்னர் காங்கிரஸுக்கு சவாலாக உருவெடுத்தது. இதனால் தெலுங்குதேசம்- காங்கிரஸ் என்கிற இரு துருவ அரசியல்தான் ஆந்திராவில் நடந்தது.

காங்கிரஸில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி வெளியேறி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். இதனையடுத்து தெலுங்கு தேசம்- ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என இன்னொரு புதிய அரசியல் களம் ஆந்திராவில் மையமானது. இரு பெரும் கட்சிகளுடன் காங்கிரஸ், பாஜகவும் களத்தில் நின்றன.
ஜெகன் கட்சியின் விஸ்வரூபம்: ஆந்திராவைப் பொறுத்தவரையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அசைக்க முடியாத பெரும் சக்தியாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. ரெட்டிகள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகம் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் ஆதரவு இருப்பதால் ஜெகனின் அஸ்திவாரம் அவ்வளவு ஸ்டிராங்காக இருக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு கம்மா நாயுடுகள் பெரும் ஆதரவாக நிற்கின்றனர். இந்த இரு சிங்கங்களுக்கு இடையேதான் காங்கிரஸும் பாஜகவும் களமாடவேண்டிய ஆடுகளாக இருக்கின்றன.
பாஜகவுடன் மோதல்: பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஆந்திரா சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மோதல் ஏற்பட்டு பாஜகவுடனான கூட்டணியை சந்திரபாபு நாயுடு முறித்துக் கொண்டார். அத்துடன் பிரதமர் மோடி உள்ளிட்டோரை கடுமையாகவும் விமர்சித்தார். பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை முதன் முதலில் ஒன்று திரட்டும் முயற்சியையும் சந்திரபாபுதான் மேற்கொண்டார். இன்றைய "இந்தியா" கூட்டணிக்கு அச்சாரம் போட்டவர்களில் அவரும் ஒருவர் என்பதுதான் சரித்திரம்.
தனித்துவிடப்பட்ட சந்திரபாபு நாயுடு : ஆனால் இப்போதைய "இந்தியா" கூட்டணி, சந்திரபாபு நாயுடுவை சேர்த்துக் கொள்ளவில்லை. அவர் நம்பகமான 'கூட்டாளி' இல்லை என்பதுதான் "இந்தியா" அணி தலைவர்கள் கருத்து. அண்மையில் கூட டெல்லி சென்று அமித்ஷா உள்ளிட்டோரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். இதனால் மீண்டும் பாஜக- தெலுங்குதேசம் கட்சி கூட்டணி உருவாகும் என கூறப்பட்டது. இதற்கு ஆந்திரா பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
சீனுக்கு வந்த என்.டி.ஆர். மகள்: இந்நிலையில் திடீரென ஆந்திரா பாஜக தலைவராக என்.டி.ராமாராவ் மகள் புரந்தரேஸ்வரியை டெல்லி பாஜக மேலிடம் நியமித்தது. என்.டி.ராமாராவின் மருமகன் சந்திரபாபு நாயுடு- அதாவது புரந்தரேஸ்வரியின் சகோதரி கணவர்தான். ஆனாலும் ஏற்கனவே ஏகப்பட்ட குடும்ப மோதல் இருப்பதால் தெலுங்குதேசம்- பாஜக கூட்டணிக்கான வாய்ப்பில்லை என்றுதான் கருதப்பட்டது.
கண்டனங்கள் மட்டும்தான்: இதனிடையேதான் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி ஆட்டத்தை காட்டினார். ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்து சிறைக்கு அனுப்பிவிட்டார். சந்திரபாபு நாயுடுவின் கைதுக்கு ஆந்திரா பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி கண்டனம் தெரிவித்தார். "இந்தியா" கூட்டணியின் மமதா பானர்ஜியும் கண்டனம் தெரிவித்தார்.
வேடிக்கை பார்க்கும் பாஜக: ஆனால் சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிரான பந்த் உள்ளிட்ட போராட்டங்களில் பாஜக இணைந்து கொள்ளவில்லை. இந்தப் போராட்டங்களை பாஜக எட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போது சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ஜனசேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண், தெலுங்குதேசத்துடன் கூட்டணி அமைக்கிறோம் என அறிவித்திருக்கிறோம். தங்களுடன் பாஜகவும் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் டெல்லி பாஜக தரப்பில் இருந்து எந்த கமெண்ட்டும் வரவில்லை.
ஜெகனுடம் கை கோர்க்குமா பாஜக?: ஒருவேளை தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாஜக கூட்டணி அமைக்கலாம். ஏனெனில் ஜெயிக்கிற குதிரையில் ஏறிக் கொள்வதையே பாஜக விரும்பும். ஜெகன் மோகன் ரெட்டியும் கூட தீவிர பாஜக எதிர்ப்பு காட்டவில்லை. "இந்தியா" கூட்டணிக்கும் போகாமல் மதில் மேல் பூனையாகத்தான் இருக்கிறார். அப்படி ஒரு பாஜக நிலைப்பாடு எடுத்தால் தெலுங்குதேசம் கட்சி நிர்கதியான நிலையில்தான் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலை சந்திக்கும். அது அந்த கட்சியின் எஞ்சியிருக்கும் எதிர்காலத்தையே 'முடித்துவிடும்' என்கின்றனர் அக்கட்சியின் மூத்த தலைவர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications