நீல் ஓ பிரையன்.. இனி யாரையும் கேள்வி கேட்க மாட்டார்.. !
கொல்கத்தா: இந்தியாவின் வினாடி வினா நிகழ்ச்சி முன்னோடியாகக் கருதப்படும் நீல் ஓ பிரையன் கொல்கத்தாவில் காலமானார்.
தற்போது பல்வேறு இடங்களில் பல வினாடி வினா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்தியாவில் முறையாக நடத்தப்பட்ட முதல் வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தியவர் என்ற பெருமைக்குரியவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீல் ஓ பிரையன்.

82 வயதான நீல், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. வாக இருந்தவர். அவருக்கு ஒரு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியாக அவரது மகன் டெரிக் ஓ பிரையின் பதவி வகித்து வருகிறார்.
தனது தந்தையின் மரணம் குறித்து டெரிக், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "நான் இதுவரை பதிவு செய்ததிலேயே மோசமான பதிவு. என் தந்தை நெய்ல் ஓ பிரெயின் காலமாகி விட்டார். கொல்கத்தாவில் உள்ள எங்களது வீட்டில் வெள்ளியன்று அவர் காலமானார்" எனத் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையிலும் நீல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications