ராதே மாவுக்கு "வெளியிலிருந்து ஆதரவு" தருகிறாரா பிரிட்னி ஸ்பியர்ஸ்...?
டெல்லி: சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மாவின் சிஷ்யையாகி விட்டாரா.. இதுதான் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் குறித்து பலரும் கேட்கும் லேட்டஸ்ட் கேள்வி.
ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்து வந்தவரான பிரிட்னி ஸ்பியர்ஸ் சமீப காலமாக ஆன்மீக மார்க்கத்திற்குத் திரும்பியுள்ளார். குறிப்பாக இந்தியாவின் பக்கம் அவரது கவனம் அதிகமாக திரும்பியுள்ளது.
யோகா செய்கிறார். தியானம் செய்கிறார். தற்போது சர்ச்சை சாமியார் ராதே மாவின் பாலோயராகவும் அவர் மாறியுள்ளார். டிவிட்டரில் ராதே மாவின் தீவிர பக்தர் ஒருவரின் பக்கத்தை அவர் பாலோ செய்கிறார்.

இந்தியா மீது பாசம் கொண்ட மேற்கத்தியர்கள்
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக ஹாலிவுட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்தியா மீது பாசம் அதிகம் வைத்துள்ளனர். பலருக்கு இந்தியாவின் கலாச்சாரம் பிடித்துள்ளது. பலருக்கு இந்தியாவின் மத நம்பிக்கைகள் பிடித்துள்ளன. பலர் யோகாவை விரும்புகின்றனர்.

ராதே மாவை விரும்பும் பிரிட்னி
இந்த நிலையில் ராதே மாவின் தீவிர பக்தர் ஒருவரின் டிவிட்டர் பக்கத்தை லைக் செய்து அவரது பாலோயராக மாறியுள்ளர் பிரிட்னி ஸ்பியர்ஸ். இது பலரையும் விழி விரிய வைத்துள்ளது.

வாவ்.. பிரிட்னி
அந்த பக்தரின் பெயர் மனோஜ் நாயக். ராதே மா பக்த் என்ற பெயரில் தனது டிவிட்டர் பக்கத்தை வைத்துள்ளார். இதில் பாலோயராக இணைந்துள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ். இது மனோஜுக்கே ஆச்சரியமாக உள்ளதாம்.

என்ன பதில் சொல்வதென்று தெரியலையே
இதுகுறித்து மனோஜ் நாயக் கூறுகையில், பிரிட்னியை எனது பக்கத்தில் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. என்ன பதில் எழுதுவது என்று கூடத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் நாயக்.

வெளியிலிருந்து ஆதரவா
நாயக்கின் பக்கத்தில் வந்து பாலோயராக மாறியுள்ளதால், பிரிட்னி ஸ்பியர்ஸ் மறைமுகமாக ராதே மாவை விரும்புகிறாரா, ஆதரிக்கிறாரா, பின் தொடர விரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications