1,30,000 கோடி ரூபாய்.. மலைக்க வைக்கும் ரபேல் ஒப்பந்த முறைகேடு.. காங்கிரஸ் பரபரப்பு!
ரபேல் ஒப்பந்தம் மூலமாக பாஜக அரசு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் மூலமாக பாஜக அரசு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கும் ரபேல் ஊழல் குறித்து காங்கிரஸ் தொடர்ச்சியாக ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது. இதில் யார் எல்லாம் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள், எவ்வளவு பணம் கைமாறி இருக்கிறது என்றும் தொடர்ந்து ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது.
ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து பாஜக அரசு வாங்கிய ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

எவ்வளவு கணிக்கப்பட்டது
பாஜக அரசு மூலம் ரபேல் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு விமானத்திற்கு ரூ.351 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மொத்தமாக 36 விமானம் வாங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்தம் 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று காங்கிரஸ் கணித்து கூறியது. அதாவது பாஜக வேண்டுமென்று அதிக விலைக்கு விமானங்களை வாங்கியுள்ளது

எத்தனை கோடி என்று கூறப்பட்டது
இந்த நிலையில் இந்த ஊழலின் தொகை உண்மையாக அதிகம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மொத்தமாக இந்த ஒப்பந்தம் மூலம் 1,30,000 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான் என்றும், இதனால் கேள்விக்கு உள்ளாகி உள்ளது என்றும் கூறியுள்ளது.

எப்படி இவ்வளவு பணம்
இது எப்படி நடந்து இருக்க முடியும் என்று காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. அதன்படி ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் முறைகேடாக 1,30,000 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஊழலின் மொத்த மதிப்பு 1,30,000 கோடி ரூபாயை தாண்டும் என்று காங்கிரஸ் தரப்பு கூறுகிறது.

நிர்மலா சீதாராமன்
மேலும் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததே நிர்மலா சீதாராமன்தான், அதற்கான ஆவணங்களில் நிர்மலா சீதாராமனின் கையெழுத்து இருக்கிறது என்றும் காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இரண்டு முக்கிய தலைகள்
இந்த ஊழலில் இரண்டு முக்கிய தலைகள்தான் தலையிட்டு இருப்பதாக காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்ற பின்தான் இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மோடிக்கு இதில் பெரிய தொடர்பு உள்ளது என்றுள்ளது. அடுத்தபடியாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு லைசன்ஸ் வழங்கியது தொடங்கி இதற்கு முழு முதற்காரணமாக இருந்தது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான். அவர்தான் இதில் இரண்டாவது குற்றவாளி என்றும் கூறியுள்ளது.
-
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications