ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடக்கவில்லை.. ராகுல் பொய் சொல்கிறார்.. அருண் ஜெட்லி பதில்
ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு, பொருளாதாரத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு, பொருளாதாரத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்துள்ளார். ராகுல் காந்தி இதில் தேவையில்லாத பொய்களை சொல்கிறார் என்றுள்ளார்.
ராகுல் காந்தியிடம் அவர் 15 கேள்விகள் கேட்டுள்ளார். ரபேல் விமானம் வாங்கியதில் மொத்தமாக ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.
ரபேல் விமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்து இருக்கலாம் என்று ராகுல் காந்தியும் காங்கிரஸ் தரப்பும் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

கடைசியில் ஒப்பந்தம்
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்தும் ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகாமல் இருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு இப்போதுதான் பாஜக ஆட்சியில் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது.

என்ன ஊழல்
இந்த நிலையில் ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
பாஜக பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு எகிப்த், கத்தாருக்கு விற்கப்பட்ட போது இதே விமானம் ரூ.1,319.80 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு விமானத்திற்கு ரூ.351 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மொத்தமாக 36 விமானம் வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மொத்தம் 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

முழுதாக முடியவில்லை
அருண் ஜெட்லி அளித்திருக்கும் விளக்கத்தில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முழுதாக ரபேல் ஒப்பந்தத்தை முடிக்கவில்லை. அவர்களின் ரபேல் ஒப்பந்தம் முழுதாக நிறைவடையவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பின்தான் ரபேல் ஒப்பந்தம் முழுதாக போடப்பட்டது. அதன்பின்பே விலையும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பாஜக அரசு இறுதி செய்த விலை உயர்வானது என்றே கூற முடியாது.

குறைவாகவே கொடுத்தோம்
அதேபோல் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டிருந்த மிக குறைந்த அடிப்படை விலையை விட நாங்கள் அடிப்படை விலையை மிகவும் குறைவாகவே கொடுத்து இருந்தோம். காங்கிரஸ் கட்சிக்கே இது தெரியும். ராகுல் காந்திக்கு இந்த விவரம் தெரியாதா என்று கேளுங்கள். இறுதி விலையில் மட்டுமே மாற்றம் இருந்தது. அடிப்படை விலை நாங்கள்தான் மிகவும் குறைவாக கொடுத்தது.

மாற்றி பேசுகிறார்
ராகுல் காந்தி ரபேல் ஒப்பந்தம் குறித்து மாற்றி மாற்றி பேசுகிறார். நாடாளுமன்றத்தில் ஒரு பேச்சு, கர்நாடக தேர்தலில் ஒரு பேச்சு, குஜராத்தில் ஒரு பேச்சு என்று அவர் இருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒரு விமானம் காங்கிரஸ் கட்சி மூலம் 530 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட இருந்தது என்றார், மற்ற இடங்களில் 730 கோடி ரூபாய், 540 கோடி ரூபாய், 520 ரூபாய் என்று மாற்றி மாற்றி பேசுகிறார்.

முழுக்க முழுக்க பொய்
இதில் எந்த விதமான தனியார் நிறுவனமும் பலன் பெறவில்லை. எந்த தனியார் நிறுவனம் பலன் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும். யாருக்கும் இதில் பலன் கிடைக்கவில்லை. இதில் தனியார் நிறுவனம் பலன் அடைந்து இருப்பதாக கூறுவது முழுக்க முழுக்க பொய் ஆகும் என்றுள்ளார்.
-
செல்வப்பெருந்தகை தூக்கப்படுகிறாரா? ராகுலுக்கு போன "ரகசிய ஆதாரம்" அடுத்ததாக அந்த கட்சியில் இணைகிறாரா? -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications