பிரதமராகும் தகுதி ராகுலுக்கு இல்லை- முலாயம் சிங்
பரெய்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு பிரதமர் ஆகும் தகுதி இல்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரெய்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற சமாஜவாடி கட்சியின் பொதுக் கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் பேசியது:

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் தேர்தலில் போட்டியிட வகை செய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தபோது, அதனைக் கிழித்தெறிய வேண்டும் என்று ராகுல் காந்தி விமர்சித்ததன் மூலம், பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் பலவீனமடையச் செய்துவிட்டார். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் அவமானமடையச் செய்துவிட்டார்.
இதுபோன்ற விமர்சனம் எழுந்த உடனேயே தனது பதவியை மன்மோகன் சிங் ராஜிநாமா செய்திருக்க வேண்டும். பிரதமர் பதவியை அவமானப்படுத்தும் வகையில் பேசி எரிச்சலூட்டுகின்ற வகையில் நடந்துகொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நாட்டின் பிரதமர் ஆவதற்குத் தகுதி இல்லை.
நாட்டின் முன்னால் பெரும் சவால்கள் நிறைந்துள்ளன. ஆனால் ஆட்சி நடத்துபவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். நாட்டின் தலைமை கோழைத்தனமாக இருக்கிறது.
அண்டை நாடுகள் எதுவும் நமக்கு நட்பு நாடாக இல்லாதது துரதிருஷ்டவசமானது.
சமாஜ்வாடிதான் மாற்று
ஆளும் காங்கிரஸ் கட்சி மீதும், எதிர்க்கட்சியான பாஜக மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்; சமாஜ்வாடி கட்சியை அவற்றுக்கு மாற்றாக கருதுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி பெரும்பான்மை பெறும். மேற்கு வங்கத்தில் பாஜகவோ அல்லது காங்கிரஸ் கட்சியோ வெற்றி பெறப் போவதில்லை. அதே நிலைதான் ஒடிஸôவிலும், தமிழ்நாட்டிலும் உள்ளது.
ஆதலால், ஆட்சி அமைப்பவரை உத்தரப் பிரதேச மாநிலமே தீர்மானிக்கும். எனவே, எங்களை மக்களவைக்கு பலமுள்ளவர்களாக அனுப்பப் போகிறீர்களா அல்லது பலவீனமானவர்களாக அனுப்ப போகிறீர்களா என்பதை நீங்கள் (மக்கள்) முடிவு செய்யுங்கள்.
முசாஃபர் நகர் கலவரத்தின்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாங்கள் நடந்து கொண்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் முயற்சி செய்தோம் என்பதே உண்மை.
1990-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதை விமர்சிக்கின்றனர். மசூதி இடிக்கப்பட்டதை தடுக்க மட்டுமல்ல, நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கவும்தான் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநில காவல் துறையில் முஸ்லிம்கள் இடம்பெறுவதை எங்கள் கட்சி உறுதி செய்துள்ளது," என்றார்.
பிரதமர்களைத் தந்த மாநிலம்
முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், "இங்கு பிரசாரம் செய்த நரேந்திர மோடி போன்ற தலைவர்கள் வகுப்பு வாதத்தை பரப்புகின்றனர்.
மத நல்லிணக்கத்தை குலைக்கும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்துவோம். உத்தரப் பிரதேசம் பல பிரதமர்களை அளித்துள்ளது. ஆனால், குஜராத் மாநிலம் தொழிலதிபர்களையும், வியாபாரிகளையும் மட்டுமே அளித்துள்ளது. மோடியின் நோக்கம் லாப, நஷ்டம் மட்டுமே' என்றார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications