For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி மீது ராகுல் காந்தி ஊழல் குற்றச்சாட்டு.. லோக்சபாவில் பேச முடியுமா? விதிமுறை என்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி மீதான தனிப்பட்ட ஊழல் குறித்து தனக்கு தெரியும் என்று ராகுல் காந்தி கூறினார். அதுகுறித்து லோக்சபாவில் அவர் பேச அனுமதிக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

இவ்வாறு பிரதமர் மீது குற்றம்சாட்ட முடியுமா, அதற்கான லோக்சபா விதிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்..

Rahul Gandhi accuse Modi in Lok Sabha? Here is what the rules state

எந்த உறுப்பினராக இருந்தாலும் அரசின் உரைகள் மீது விவாதம் நடத்த வேண்டுமானாலும் கூட பெயரை முன்கூட்டியே சபாநாயகரிடம் தர வேண்டும். அப்படியிருக்கும்போது தனிப்பட்ட பொருளை எடுத்து பேச வேண்டும் என்றால் கட்டாயமாக பெயரை தருவதோடு, எதைப்பற்றி பேசப்போகிறோம் என்ற விவரத்தை அளிக்க வேண்டும்.

அதை பரிசீலித்து சபாநாயகர் அனுமதிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஒருவேளை சபாநாயகர் அனுமதியை பெறாமல், சம்மந்தப்பட்டவர் பெயரை குறிப்பிடாமல் அல்லது குறிப்பிட்டு குற்றம்சாட்டி பேசிவிடவும் வாய்ப்புண்டு. அப்போது அதை அவைக்குறிப்பில் வைத்திருப்பதா வேண்டாமா என்பதையும் சபாநாயகரே முடிவு செய்வார்.

காங்கிரஸ் துணை தலைவரும், லோக்சபா எம்.பியுமான ராகுல் காந்தி இதுவரை சபாநாயகர் அலுவலகத்தை இதுகுறித்து அணுகவில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.

English summary
Congress vice president, Rahul Gandhi said on Wednesday that he has information about corruption by Prime Minister, Narendra Modi. He alsosaid that he wanted to speak about it in Parliament, but the ruling party was not allowing him to do so.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X