மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் வரும்.. மோடி மீது ராகுல் கடும் தாக்கு
தமிழக மக்கள் மீது மாற்று மொழியை பாஜக திணிக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
Recommended Video

டெல்லி: தமிழக மக்கள் மீது மாற்று மொழியை பாஜக திணிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்றதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் டெல்லியில் காங்கிரஸ் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. இன்று நிறைவு நாளின்போது ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் சென்று இளைஞர்களிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள். அங்கிருந்து வரும் பதில் ஒன்றும் செய்யவில்லை என்பதுதான். அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.

மறந்துவிட வேண்டாம்
இந்தியா வளர்ந்து வரும் நாடாக உள்ளபோதிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பங்குண்டு என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

காங்கிரஸ் நாட்டின் குரல்
பாஜக கட்சி ஒரு அமைப்பின் குரல், காங்கிரஸ் நாட்டின் குரல் ஆகும். மக்களின் சேவகனாக செயல்படுபகிறது காங்கிரஸ். அதனால் யார் ஆட்சியில் அமர்ந்தாலும் கேள்வி கேட்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது.

செல்வந்தர்களின் காப்பாளர்
வங்கியில் மக்களின் பணத்தை கொள்ளையடிப்போரை மோடி அரசு பாதுகாக்கிறது. செல்வந்தர்களின் காப்பாளராக செயல்படுகிறது பாஜக.

யாராலும் தடுக்க முடியாது
முக்கிய பிரச்சினைகள் அனைத்திலும் பிரதமர் மௌனம் காக்கிறார். காங்கிரஸ் கட்சி உண்மையை பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. பழங்குயினரின் வனம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அழகிய தமிழ் மொழியிலிருந்து மாறுமாறு தமிழர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

வாய்மைக்காக போராட்டம்
தமிழ் மக்கள் மீது மாற்று மொழியை திணிக்கின்றனர். ஊழலும் அதிகாரமும்தான் நாட்டை ஆண்டு வருகிறது. கவுரவர்களை போன்று பதவி ஆசையில் இருப்பவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர். பாண்டவர்கள் போன்று வாய்மைக்காக போராடுபவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.

அமித்ஷா
கொலை வழக்கில் சிக்கியவரை பாஜக தலைவராக ஏற்று கொண்டுள்ளது. ரபேல் ஊழல், அமித்ஷாவின் மகன் ஊழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாய்த் திறப்பதில்லை ஏன். மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மோடி யோகா செய்து கொண்டிருக்கிறார். 2019 தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையிலான தேர்தலாக இருக்கும் உயர்கல்வியை காங்கிரஸ் மேம்படுத்தும்வ ரும் 2019 ல் கொள்கை ரீதியிலான போர் நடக்கும். சுதந்திர காலத்தில் காங்கிரஸ் போராடியது போல் வரும் காலத்தில் போராடும். இந்தியாவை மாற்ற நாம் ஒன்றுபடுவோம் என்றார் ராகுல்காந்தி.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications