பாகிஸ்தான் + சீனா.. ரியல் எதிரி யார் என்றே மத்திய அரசுக்கு தெரியவில்லை.. ராகுல் காந்தி ஆவேசம்!
டெல்லி: இந்தியாவின் ராணுவ நடவடிக்கை, இலக்குகள் குறித்த அத்தனை தகவல்களையும் பாகிஸ்தானுக்கு சீனா கொடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சீனா என்ற வார்த்தையைச் சொல்லவே பயப்படுகிறார்கள் என்று கூறிய ராகுல் காந்தி, இந்தியாவின் வெளியுறவு கொள்கை திவாலாகிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், 1971 போரின் போது பாதுகாப்புப் படையினருக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முழு சுதந்திரம் அளித்தார். அவர் எந்த வல்லரசு நாட்டின் ஆதிக்கத்திற்கும் அடி பணியவில்லை. இந்திரா காந்தியைப் போல் மோடிக்கு தைரியம் இருந்தால் டிரம்ப் பொய் சொல்கிறார் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்லட்டும்.
இந்திய ராணுவத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று தைரியம் இருந்தால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்லட்டும்.. மத்திய அரசு செய்த தவறு காரணமாக விமானங்களை இழந்தோம். அரசியல் தலைமையின் உத்தரவு காரணமாகவே பாகிஸ்தான் ராணுவ தளங்களைத் தாக்கவில்லை என்று ராணுவ அதிகாரியே கூறுகிறார். இந்திய ராணுவம் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்தது பிரதமர் மோடிதான்.
இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக 29 முறை டிரம்ப் கூறிவிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது பொய் என்று மோடியால் கூற முடியுமா? எந்த நாடும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. இதன் மூலம் இந்தியாவையும், பாகிஸ்தானையும் சமமாகப் பாவித்துவிட்டனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விருந்து அளித்ததைக் கண்டிக்க மோடிக்கு தைரியம் இருக்கிறதா?
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எந்த கிரகத்தில் இருக்கிறார்? இந்தியாவின் ராணுவ நடவடிக்கை, இலக்குகள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் பாகிஸ்தானுக்கு சீனா கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவ நடவடிக்கை குறித்த தகவல்களை நேரலையில் சீனா கொடுத்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு சீனா உதவுவது குறித்து ஏற்கனவே நான் பலமுறை எச்சரித்த போது மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை திவாலாகிவிட்டது. தீவிரவாதிகள் பற்றி கேள்வி கேட்டாலே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று சித்தரிக்க முயல்கிறார்கள். அதுதான் பாஜக அரசின் மனநிலை. சீனா என்ற ஒரு வார்த்தையைக் கூட பாதுகாப்பு அமைச்சரோ வெளியுறவு அமைச்சரோ கூறவில்லை. சீனா என்று சொல்லவே பயப்படுகிறார்கள். உண்மையான எதிரி சீனா தான். என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications