டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைதாகி விடுதலை !
டெல்லியில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடுதலை செய்யப்பட்டார்.
டெல்லி: டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினரை சந்தித்த பின்னர் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை டெல்லி போலீசார் மீண்டும் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார்.
ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதிவைத்திருந்த தற்கொலை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rahul Gandhi at Parliament street police station, Delhi. pic.twitter.com/JApwnEoZUu
— ANI (@ANI_news) November 2, 2016
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் சடலத்தைக் காண மனோகர் லால் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி சென்றார். அப்போது அவருக்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி செல்ல முயன்ற ராகுல் காந்தியை டெல்லி போலீசார் கைது செய்தனர். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி அவரை கைது செய்தனர். இதையடுத்து, ராகுல் காந்தியை கைது செய்த போலீசார் சில மணி நேரம் கழித்து விடுவித்தனர்.
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். இதையடுத்து அவரை மீண்டும் டெல்லி போலீஸ் கைது செய்தது. கன்னவுட் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அங்கிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள மந்தீர் மர்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications