ரூ. 1.30 லட்சம் கோடியில் மோடி, அம்பானி நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. வெளுக்கும் ராகுல்!
Recommended Video

டெல்லி: ரபேல் ஊழலில் பிரதமர் மோடியை மேலும் ஒரு டிவீட் மூலம் கடுமையாக சாடியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
ரபேல் மோசடியில் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளதை பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டே அம்பலப்படுத்தி விட்டார். நாட்டுக்கு துரோகம் செய்து விட்டார் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியிருந்தார்.

ரபேல் விமான பேரத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானிக்கு தருமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டதால்தான் அந்த ஒப்பந்தம் ரிலையன்ஸுக்குப் போனதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டே பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய அரசே கூறியதால்தான் ஒப்பந்தம் ரிலையன்ஸுக்குப் போனதாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் சார்பில் ஹோலண்டேவும்தான் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹோலண்டே போட்டுள்ள இந்த குண்டால் தேசிய அளவில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமரை நேரடியாக குற்றம் சாட்டிப் பேசி வருகிறார். அவரது குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் ஹோலண்டேவின் பேட்டி வந்து சேர்ந்துள்ளது.
The PM personally negotiated & changed the #Rafale deal behind closed doors. Thanks to François Hollande, we now know he personally delivered a deal worth billions of dollars to a bankrupt Anil Ambani.
— Rahul Gandhi (@RahulGandhi) September 21, 2018
The PM has betrayed India. He has dishonoured the blood of our soldiers.
இந்த நிலையில் ராகுல் காந்தி போட்டுள்ள டிவீட்டில், ரபேல் டீலை ரகசிய அறையில் அமர்ந்து பிரதமரே நேரடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றியுள்ளார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டேவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். இப்போது தெரிகிறது அனில் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் எப்படி கைமாறியது என்று. இந்தியாவுக்குத் துரோகம் செய்து விட்டார் பிரதமர் மோடி. நமது வீரர்கள் சிந்திய ரத்தத்தை அவமதித்துள்ளார் என்று காட்டமாக தாக்கியுள்ளார் ராகுல் காந்தி.
இந்த நிலையில் தற்போது இன்னொரு டிவீட் போட்டுள்ளார் ராகுல் காந்தி. அதில் மோடியையும், அனில் அம்பானியையும் அவர் கடுமையாக சாடியுள்ளார். அந்த டிவீட்டில் ராகுல் கூறுகையில்,
The PM and Anil Ambani jointly carried out a One Hundred & Thirty Thousand Crore, SURGICAL STRIKE on the Indian Defence forces. Modi Ji you dishonoured the blood of our martyred soldiers. Shame on you. You betrayed India's soul. #Rafale
— Rahul Gandhi (@RahulGandhi) September 22, 2018
பிரதமரும், அனில் அம்பானியும் சேர்ந்து நாட்டின் பாதுகாப்புப் படை மீது ரூ. 1.30 லட்சம் கோடியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியுள்ளனர். நமது படை வீரர்கள் செய்த தியாகத்தையும், சிந்தி ரத்தத்தையும் அவமானப்படுத்தி விட்டீர்கள் மோடிஜி. வெட்கக்கேடு. இந்தியாவின் ஆன்மாவுக்கு துரோகம் செய்து விட்டீர்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications