பிரச்சாரத்தில் சொன்னதையே சொல்லும் ராகுல்: காதில் 'ரத்தம் வரும் வரை' விட மாட்டாரோ!
டெல்லி: இந்த வாட்ச் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?, இந்த டி-சட்டை எங்கு தயாரித்தார்கள் தெரியுமா? மேட் இன் ராமநாதபுரம், மேட் இன் தெலுங்கானா, மேட் இன் மிசாபூர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பிரச்சாரத்தில் ஒயாமல் கேட்கும் வார்த்தைகள் இவைதான்.

என்னத்த பேசி என்னத்த..?
அரசியலுக்கு புதியவரானாலும், தான் பிறந்த குடும்ப பின்னணியால், குறுகிய காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராகிவிட்டார் ராகுல்காந்தி . ஆனால் அமைச்சராக இருந்து கூட அனுபவமில்லாத ராகுலை பிரதமராக்க காங்கிரஸ் மேலிடம் துடிக்கிறது. ராகுலுக்கோ தேர்தல் பிரசாரத்தில் என்ன பேசுவது என்றே தெரியாமல் விழிக்கிறார். அவர் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் காங்கிரஸ் தோல்வியை தழுவியது பழைய வரலாறு.

நான் இருக்கிறேன் சகோதரா..
ராகுல்காந்தியின் தடுமாற்றத்தையும், மக்கள் மத்தியில் அவரின் பிரச்சாரத்துக்கு செல்வாக்கு இழந்து வருதையும் கவனித்த காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, தனது மகள் பிரியங்காவை பிரச்சார களத்திற்கு கொண்டுவந்தார். அவரும் ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியிலேயே வலம் வந்து சகோதரனை காப்பாற்ற தொடர் பிரச்சாரங்களை செய்து வந்தார். ராகுலை ஒப்பிட்டால் பிரியங்கா பிரச்சாரம் எவ்வளவோ தேவலை.. அப்டேட்டாக உள்ளார்.

சொன்னதை சொல்லும் ராகுல்
எந்த ஊருக்கு பிரச்சாரத்துக்கு சென்றாலும் ஒரே டயலாக்கை ரிப்பீட் அடிக்கிறார் ராகுல்காந்தி. தகவல் தொடர்பு இவ்வளவு வேகமாக வளர்ந்துள்ள யுகத்தில் இருக்கும் ராகுலுக்கு, இந்த பிரச்சார யுக்தி கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக்கிவிடும் என்பது எப்படி புரியாமல் போனது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக கண் முன் நிற்கிறது. அந்த யுக்தி வேறு ஒன்றும் இல்லை, ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு பேசுவதுதான்.

மேட் இன் ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த ராகுல்காந்தி, வருங்காலத்தில் 'மேட் இன் சைனா' என்பதற்கு பதிலாக 'மேட் இன் இந்தியா', 'மேட் இன் தமிழ்நாடு' (தமிழகம் இந்தியாவில் இல்லையா என கேட்கப்படாது) என்று மாற வேண்டும் என்று கர்ஜனை செய்தார். நீங்கள் போட்டிருக்கும் டி-சட்டை, கட்டியிருக்கும் வாட்ச் ஆகியவற்றில் இந்த வாசகங்கள் இருக்கும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றார். ராகுல் ஏதோ புதிதாக கருத்து சொல்ல வருகிறார் என்று நினைத்திருந்தபோதே, அடுத்ததாக தெலுங்கானாவுக்கு பிரச்சாரத்துக்கு போனார் ராகுல்.

அதே பல்லவி
தெலுங்கானாவில் போய் நின்று கொண்டு 'மேட் இன் சைனா' என்பதற்கு பதிலாக என ஆரம்பித்து 'மேட் இன் தெலுங்கானா' என்று மாற வேண்டும் என்று கொண்டு வந்து நிறுத்தினார்.
தென் மாநிலத்துக்கு எழுதி வைத்த டயலாக் போல என மனதை தேற்றிக்கொண்டால், இப்போது வட மாநிலங்களிலும் இதையே பேசிவருகிறார் ராகுல்.

இந்த வாட்ச அமெரிக்காவுல கேட்டாக..
உத்தரபிரதேசத்தின் மிசாபூரில் நேற்று பேசிய ராகுல், கைக்கடிகாரத்தில் 'மேட் இன் மிசாப்பூர்' என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட வேண்டும். ஒரு நாள் இல்லை ஒருநாள்.. அமெரிக்க அதிபர் நேரம் பார்க்க கைக்கடிகாரத்தை திருப்பும்போது, அதில் 'மேட் இன் மிசாப்பூர்' என்று இருக்க வேண்டும் என்றார். சரி அத்தோடு விடுவார் என்று பார்த்தால், மிசாப்பூரில் இருந்து நூறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஜுனாப்பூரில் அடுத்ததாக பிரச்சாரம் செய்த ராகுல் அங்கு நின்றுகொண்டு 'மேட் இன் ஜுனாப்பூர்' என்றாரே பார்க்கலாம்.

இது புதுசில்லையே..
இப்படித்தான் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் அர்ணாப் கோஸ்வாமி கேட்ட கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல், பெண்கள் முன்னேற்றம், நூறுநாள் வேலைத்திட்டம் என்று சம்மந்தமே இல்லாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார் ராகுல்காந்தி. இப்போது பிரச்சார மேடையிலும் புதிதாக சொல்ல எதுவும் கிடைக்காமல் காதில் கேட்பவர்கள் ரத்தம் வர வைத்துக்கொண்டுள்ளார். புதுசா ஏதாவது யோசிங்க பாஸ்..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications