தேச விரோத கோஷங்களை ராகுல் ஆதரிக்கிறாரா, இல்லையா?.. அமீத் ஷா கேள்வி
லக்னோ: தேச விரோத கோஷங்களுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவிக்கிறாரா இல்லையா என்பதை அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
இதன் மூலம், ஜே.என்.யூ விவகாரத்தில் காங்கிரசுக்கு எதிரான காய் நகர்த்தலை அமித் ஷா ஆரம்பித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், பஹ்ரைச் என்ற பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித்ஷா இதுகுறித்து பேசியதாவது: "அப்சல் குரு.. உங்களின் கொலையாளிகள் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள்.., இந்தியா பல பகுதிகளாக உடையும்.." என்றெல்லாம் கோஷமிடுவது தேசத்துரோகமா இல்லையா, என்பதை காங்கிரசிடமும் அதன் தொண்டர்களிடமும் நான் கேட்க விரும்புகிறேன்.
இந்தியாவுக்கு எதிரான கோஷங்களுக்கு ராகுல் காந்தி ஆதரவு அளிக்கிறாரா என்பதை இந்த நாட்டுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த கோஷங்களை அவர் கண்டிப்பதாக இருந்தால் அதை அவர் செய்ய வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக, தேச நலனை பலி கொடுத்து, ஓடி ஒளியக்கூடாது.
தேசத்துக்கு எதிராக கோஷமிடுவது தேசத்துரோகமா அல்லது கருத்து சுதந்திரமா என்பதை நாடாளுமன்றத்தில் அமர்ந்து, அரசுக்கு எதிராக கருத்து கூறிவரும் கட்சிகள் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications