தங்கள் சித்தாத்தங்களுக்கு எதிரானோரின் சிலைகளை உடைக்க பாஜக சிக்னல் காட்டுகிறது.. ராகுல் காட்டம்

தங்கள் சித்தாத்தங்களுக்கு எதிரானோரின் சிலைகளை உடைக்க கட்சியினருக்கு பாஜக சிக்னல் காட்டுகிறது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தங்கள் சித்தாத்தங்களுக்கு எதிரானோரின் சிலைகளை உடைக்க கட்சியினருக்கு பாஜக சிக்னல் காட்டுகிறது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை தொடர்ந்து புதுக்கோட்டையிலும் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

Rahul gandhi condemns for the damage of Periyar statue in Tamilnadu

பெரியார் சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் புதுக்கோட்டை விடுதி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, திரிபுராவில் லெனின் சிலைகளை அகற்றியதை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஊக்குவித்தது. அதேபோல் தலித் மக்களுக்காக போராடிய பெரும் சமூக சீர்திருத்தவாதி, பெரியார் போன்ற அவர்களின் சித்தாந்தத்தை எதிர்த்தவர்களின் சிலைகளை அழிக்க கட்சியினருக்கு பாஜக சிக்னல் காட்டியுள்ளது.

தமிழகத்தில் அவரது சிலை இன்று சேதப்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார். மேலும் சேதப்படுத்தப்பட்ட பெரியாரின் சிலை போட்டோவையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+