டெல்லி திரும்பும் மூடு இல்லை?: மீண்டும் விடுப்பை நீட்டித்த ராகுல்
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விடுப்பை மீண்டும் நீட்டித்துள்ளாராம்.
பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் வேளையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 2 வார விடுப்பில் சென்றார். அவர் பாங்காக்கில் ஓய்வு எடுப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. ராகுல் காந்தி பாங்காக்கில் இல்லை உத்தரகண்ட் மாநில மலைப்பகுதியில் தான் உள்ளார் என்று கூறி அதற்கான புகைப்படத்தையும் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வெளியிட்டார்.

இருப்பினும் ராகுல் உத்தரகண்டில் இல்லை என்று காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில் ராகுல் விடுப்பு முடிந்து திங்கட்கிழமை டெல்லி திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் விடுப்பை நீட்டித்துள்ளதாகவும் இந்த வார இறுதியில் தான் டெல்லிக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் ராகுல் விடுப்பை மீண்டும் நீட்டித்துள்ளாராம். அவர் இந்த வார இறுதியில் அல்ல மாறாக மாத இறுதியில் தான் டெல்லி திரும்புவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்சியை புதுப்பிப்பது குறித்து சிந்தித்து புதிய திட்டங்கள் தீட்டி, புதிய தெம்புடன் வரவே ராகுல் விடுப்பில் சென்றுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications