விடுப்பை நீட்டித்த ராகுல்: வார இறுதியில் தான் டெல்லி திரும்புகிறார்
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது விடுப்பை நீட்டித்துள்ளார். அவர் இந்த வார இறுதியில் தான் டெல்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இரண்டு வாரம் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். அவர் பாங்காக் சென்றுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர் உத்தரகண்ட் மலைப் பகுதியில் இருப்பதாக காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கூறி புகைப்படத்தையும் வெளியிட்டார். ஆனால் ராகுல் உத்தரகண்டில் இல்லை என்று காங்கிரஸ் கூறியது.

விடுப்பு முடிந்து ராகுல் காந்தி இன்று டெல்லி திரும்புவார் என்று காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அவர் விடுப்பை நீட்டித்துள்ளதாகவும் வார இறுதியில் தான் டெல்லி வருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தும் திட்டங்களுடன் திரும்பி வருவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி கட்சியின் தலைவர் ஆக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி வாத்ராவுக்கு கட்சிப் பொறுப்பு அளிக்குமாறு தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் வேளையில் ராகுல் விடுப்பில் சென்றுள்ளது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications