For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“மோடி” சாதி.. ராகுல் காந்தி சொன்ன “வார்த்தை”! 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜாமீன் தந்த நீதிமன்றம்

Google Oneindia Tamil News

காந்திநகர்: கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி சாதிப்பெயர் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றியது தொடர்பாக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அவதூறு வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உடனே ஜாமீனும் வழங்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடியின் சாதி பெயர் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மோடி என்ற துணை பெயரை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, இந்த பெயரை துணை பெயராக வைத்து இருப்பவர்கள் எல்லாம்.. என்று ஒரு வார்த்தையை கூறி விமர்சித்து பேசினார்.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை! ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை! "மோடி சாதி.." சர்ச்சை கருத்து! சூரத்தில் நடந்த அவதூறு வழக்கு என்ன

ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு

ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு

இதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா முன்பு விசாரணைக்கு வந்தது.

காங்கிரஸ் வரவேற்பு

காங்கிரஸ் வரவேற்பு

இந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். சூரத் வந்த அவரை வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறி போஸ்டர்களை அடித்து ஒட்டி இருந்தனர். இந்துஸ்தானின் சிங்கம் ராகுல் காந்தி என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு

ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு

பாஜகவின் சர்வாதிகாரத்துக்கு காங்கிரஸ் பணியாது என்று அக்கட்சியினர் ராகுல் காந்தி செல்லும் வழி நெடுகிலும் பதாகைகளை ஏந்து நின்று அவருக்கு வரவேற்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியினரின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் ராகுல் காந்தி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் அவதூறு வழக்கு குற்றவாளி மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

தண்டனையும் ஜாமினும்

தண்டனையும் ஜாமினும்

இதனை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், 30 நாட்களில் அவதூறு வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கியது.

English summary
The Surat court has ruled that Congress MP Rahul Gandhi is guilty in the case in regarding his speech on Modi's caste name in 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X