நாளை காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவாரா?
டெல்லி: டெல்லியில் நாளை நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டார் என்று தெரிகிறது. தோல்வி பழியை சுமப்பதை தவிர்ப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
லோக்சபாவுக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
பாரதிய ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரசைப் பொறுத்தவரை, மன்மோகன்சிங் 2 முறை தொடர்ச்சியாக பிரதமர் பதவி வகித்து விட்டார். மீண்டும் பிரதமராக பதவி ஏற்க விரும்பவில்லை என்று அவர் கூறிவிட்டார்.

ராகுல் பிரதமர் வேட்பாளர்?
இதையடுத்து, அனைவரின் பார்வையும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மீது விழுந்துள்ளது. அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

காங். கூட்டம்
இந்த சூழ்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம், நாளை நடைபெறுகிறது. அதில், ராகுல் காந்தி காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ராகுலும் கூட, காங்கிரஸ் கட்சியின் சிப்பாய். கட்சி எனக்கு என்ன பொறுப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்று கூறினார்.

அறிவிப்பு இல்லை
இந்நிலையில், நாளைய கூட்டத்தில், ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தோல்வி பழியில் இருந்து தப்பிக்க திட்டம்
இந்த தேர்தல் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தேர்தலாக காணப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தவுடன், அந்த பழி முழுவதும் ராகுல் மீது சுமத்தப்படும். எனவே, அவரை வேட்பாளராக நிறுத்துவது ‘ரிஸ்க்' ஆனது.
இதனால் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு பதிலாக தேர்தல் பிரசார பொறுப்பாளராகவோ, கட்சியின் செயல் தலைவராகவோ ராகுல் காந்தியை அறிவிக்கலாம் என்று ஒரு யோசனை காங்கிரசில் இருக்கிறதாம். இதனால் நாளைய கூட்டத்தில் ராகுல் காந்தி, தேர்தல் பிரசார பொறுப்பாளராகவோ, செயல் தலைவராகவோ அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications