அருணாச்சல் விவகாரம்.... மோடிக்கு ஜனநாயகத்தை உணர்த்திய சுப்ரீம்கோர்ட்டுக்கு 'தேங்க்ஸ்'- ராகுல்
டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து மீண்டும் காங்கிரஸ் அரசு செயல்பட உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜனநாயகம் என்றால் என்ன என்பது குறித்து பிரதமர் மோடிக்கு உணர்த்தியதற்காக உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. மொத்தம் 60 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 42 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.

மாநில முதல்வர் நபம் துகியின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனி அணியாக செயல்படத்தொடங்கினர். இவர்கள், பா.ஜனதாவின் 11 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 சுயேச்சைகளுடன் இணைந்து கொண்டனர்.
சபாநாயகர் நபம் ரெபியா மீதும் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்தனர். இதை சபாநாயகர் ஏற்கவில்லை. பின்னர் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி பாஜக மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் நபம் துகியை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.
அவருக்கு பதிலாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கலிகோ பால் என்பவரை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். இதற்கு நபம்துகி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே மாநில அரசின் அனுமதியின்றி சட்டசபை கூட்டத் தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நபம்துகி உச்சநீதிமன்றத்துக்கு சென்றார்.
Thank you Supreme Court for explaining to the Prime Minister what democracy is. #ArunachalPradesh
— Office of RG (@OfficeOfRG) July 13, 2016
இந்த வழக்கில் இன்று அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை ரத்து செய்ய ஆளுநர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும் அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டசபையை முன்கூட்டியே கூட்டி சில அறிவிப்புகளை வெளியிட்ட மாநில ஆளுநர் நடவடிக்கைகள் செல்லாது எனவும் கூறி மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது.
இத் தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஜனநாயகம் என்றால் என்ன? என்று பிரதமர் மோடிக்கு உணர்த்தியதற்காக உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications