ராகுல்: விவசாயிகள் போராட்டம், சீன எல்லை பிரச்னை - மத்திய அரசுக்கு விடுக்கும் அடுக்கடுக்கான கேள்விகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லியில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தங்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல நடத்துவதா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய ராகுல் காந்தி, விவசாயிகள் பிரச்னை, இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னை போன்றவற்றில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.

Rahul Gandhi Questions to the Central Government over Farmers protest, Chinese Boundary Issue

"இந்தியாவில் தற்போது விவசாயிகள் நடத்தப்படும் முறையைப் பார்த்து நாடே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. சொந்த குடிமக்களையோ தீவிரவாதிகள் போல மோதி அரசு நடத்துகிறது," என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

"விவசாயிகள் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டவே வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்துகிறார்கள். சமீபத்தில் செங்கோட்டைக்குள் சிலர் நுழைந்த பிறகு நடந்த அசம்பாவிதம் தொடர்பாக ஏற்கெனவே நான் கேள்வி எழுப்பியிருக்கிறேன். முதலில் செங்கோட்டைக்குள் நுழைந்து பிரச்னை பெரிதாக எப்படி அனுமதிக்கப்பட்டது என்பதை இந்திய உள்துறை அமைச்சர்தான் தெளிவுபடுத்த வேண்டும்," என்றார் ராகுல் காந்தி.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி எதற்காக தேர்வு செய்யப்பட்டாரோ அந்தப்பணியை அவர் சரிவர செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

https://twitter.com/RahulGandhi/status/1356912501133250565

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல இந்திய அரசு நடத்துவது வேதனை அளிக்கிறது. மத்தியில் ஆளும் மோதி அரசுக்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் தவிர அனைவரும் தீவிரவாதிகள் போலவே தெரிகிறார்கள் என்று ராகுல் கூறினார்.

இந்தியா, சீனா இடையிலான எல்லை பதற்றம் தொடருவது குறித்துப் பேசிய அவர், "உண்மையில் எல்லை விவகாரத்தில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்க இந்திய அரசால் முடியவில்லை. அங்குள்ள நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மோதி அரசு தவறி விட்டது," என்று ராகுல் குற்றம்சாட்டினார்.

எல்லை தாண்டி சீனா அத்துமீறி ஊடுருவி இந்திய மண்ணை ஆக்கிரமிக்கும் செயல் தேசத்துக்கு மிகவும் ஆபத்தானது என்று ராகுல் குறிப்பிட்டார்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனா, ஆயிரம் கிலோ மீட்டர்கள் அளவுக்கு கபளீகரம் செய்து விட்டது. இத்தனை நடந்தபோதும் பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதியை மோதி அரசு அதிகரிக்கவில்லை. அப்படியென்றால் எல்லை தாண்டி வரும் சீன படையினரை கட்டுப்படுத்தவோ எதிர்கொள்ளவோ எங்களுடைய ராணுவத்தை தயாராக வைத்திருக்க மாட்டோம். அதற்கு நிதி ஆதரவைத்தர மாட்டோம் என்ற வலுவான செய்தியை சீனாவுக்கு விடுக்கிறாரா நரேந்திர மோதி என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்கள் கடும் சிக்கலான சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நாட்டை பாதுகாக்கும் அவர்கள், 100 சதவீதம் பங்களிப்பை வழங்க அவர்களின் நலன்களுக்கு 110 சதவீத பங்களிப்பை இந்திய அரசு வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+