ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம் மீது ரயில் மோதியது- டிரைவர் உயிர் தப்பினார்
இந்துப்பூர்: ராகுல்காந்தியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது ரயில் மோதிய விபத்தில் கார் டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆந்திர மாநிலம் இந்துப்பூர் நகரில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றுகிறார்.
இதற்காக புட்டபர்த்திக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கும் ராகுல்காந்தி, அங்கிருந்து கார் மூலமாக இந்துப்பூர் செல்கிறார். இதையொட்டி அவர் பயணிக்கும் சாலைகள் நெடுங்கிலும் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார்கள் ஆந்திர போலீசார்.

இதன் ஒருபகுதியாக பாதுகாப்பு ஒத்திகை இன்று மதியம் நடந்தது. ராகுல்காந்தியின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் அம்பாசிட்டர் கார் ஜாமர்களுடன் அங்குமிங்கும் சென்று வந்தது.
இந்த ஒத்திகையின்போது, இந்துப்பூரின் புறநகரான குத்தம் என்ற பகுதியில் ஆளில்லாத ரயில்பாதை ஒன்றை கடக்க முற்பட்டபோது தண்டவாளத்தின் நடுவில் கார் திடீரென நின்றுவிட்டது. அப்போது பெங்களூர் செல்லும் ரயில் அந்த பாதையில் வேகமாக வந்துகொண்டிருந்தது. ரயில் வருவதை பார்த்த டிரைவர் சமயோஜிதமாக யோசித்து உடனடியாக காரில் இருந்து கீழே குதித்தார். அவர் குதித்த அதே நேரத்தில் கார் மீது ரயில் மோதிவிட்டு சென்றது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications