தம்பி, ஓரமாப் போயி குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் சாப்பிடுங்க.. ராகுலை வாரிய ஆஸம் கான்
லக்னோ: உ.பியைச் சேர்ந்த சர்ச்சைப் பேச்சுக்களின் சொந்தக்காரரும் சமாஜ்வாடி தலைவரும், அமைச்சருமான ஆஸம்கான், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ரொம்பவே கிண்டலடித்துப் பேசியிருப்பது காங்கிரஸாருக்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளது.

ராகுல் காந்தி ஒரு குழந்தை. அவர் பேசாமல் மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டு அமைதியாக இருப்பதுதான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளது காங்கிரஸாரை கொதிப்படைய வைத்துள்ளது.
உ.பி. மாநிலம் ராம்பூரில் அவர் பேசுகையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு குழந்தை. இன்னும் வளராமல் இருக்கிறார். அவரை யாரும் சீரியஸாகவே எடுத்துக் கொள்வதில்லை.
அங்குமிங்கும் போய் ஓடி விளையாடுகிறார் (பாதயாத்திரையைச் சொல்கிறார்) . இதனால் அவர் டயர்ட் ஆகி விட்டார். பேசாமல் அவர் மிட்டாய் டப்பாவை எடுத்துக் கொண்டு அமைதியாகப் போய் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். தன்னைப் போன்ற மற்ற குழந்தைகளுக்கும் கொடுத்து பகிர்ந்துண்டு விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் ஆஸம் கான்.
ஆஸம்கானின் இந்தப் பேச்சால் காங்கிரஸார் கடுப்பாகியுள்ளனர். இது வரம்பு மீறிய பேச்சு என்று ஆஸம்கானுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை ராகுல் காந்தி புன்டல்காண்ட் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார் என்பது நினைவிருக்கலாம். அப்போது அவர் பேசுகையில், சமாஜ்வாடி வாடி அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications