சாதி இடஒதுக்கீடுக்கு முற்றுப்புள்ளி, பொருளாதார இட ஒதுக்கீடு வேண்டும்: ஜனார்த்தன் திவிவேதி
டெல்லி: சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு ராகுல் வழி வகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜனார்த்தன் திவிவேதி.
சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடுக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி வகுப்பினரின் முன்னேற்றத்துக்காக அவர்களுக்கான இடஒதுக்கீடுக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் கூட இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசியிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜனார்த்தன் திவிவேதி, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டைக் கொண்டு வர வேண்டும் என சர்ச்சைக்குக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து ஜனார்த்தன் திவிவேதி கூறியதாவது:-
இப்போதைய இடஒதுக்கீடு முறையை (சாதி அடிப்படையிலானது) முடிவுக்கு கொண்டு வரவேண்டும். சுயநலவாதிகளால் தான் இது இதுவரை நடக்காமல் போய்விட்டது. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய இனங்களில் உண்மையிலேயே தேவைப்படுகிறவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறதா? இந்த வகுப்புகளில் மேல்தட்டில் இருக்கிறவர்கள் தான் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகின்றனர்.
சமூக நீதிக்கும், சாதிய முறைக்கும் வித்தியாசம் உண்டு. சமூக நீதி என்ற கருப்பொருள் தான் இப்போது சாதிய முறையாக மாறிவிட்டது. இந்த முறையை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்களின் கருத்துக்களை ராகுல் காந்தி நேரிடையாக கேட்டுள்ளார். நான் இப்போது அவரை வலியுறுத்துகிறேன். இதுதொடர்பாக அவர் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும். எல்லா வகுப்பினரையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு பற்றி பேசப்பட வேண்டும். காங்கிரசின் எதிர்காலத்தலைவர் ராகுல் காந்திதான். அவர் தான் நாட்டின் எதிர்காலத்தலைவர். அப்போது தான் (பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வந்தால்தான்) சமத்துவ அடிப்படையிலான ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நான் கூறுவதற்கு காரணம் உண்டு. காலங்கள் மாறி இருக்கின்றன. தற்போது சாதிய முறைக்கு வெளிப்படையாக வக்கலாத்து வாங்குகிற தார்மீக துணிச்சல் யாருக்கும் கிடையாது.1960-களில் சாதியத் தடைகளை தகர்த்து எறிய உருவான இளைஞர் இயக்கத்தின் மூலம் தான் நான் அரசியலுக்கு வந்தேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications